தாமதமாக வருவதாக புகார்: செல்ஃபி மூலம் வருகையை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

7 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் பாரபங்கி மாவட்டத்தில் தங்களது வருகையை பதிவு செய்கின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தாமதமாக வருவதாக புகார்: செல்ஃபி மூலம் வருகையை பதிவு செய்ய ஆசிரியர்களுக்கு உத்தரவு!!

ஆசிரியர்கள் செல்ஃபி எடுத்து இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார்கள்.


Barabanki, Uttar Pradesh: 

உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் ஆரம்ப பள்ளிகளுக்கு தாமதமாக வருவது அல்லது தனக்குப் பதிலாக இன்னொருவரை அனுப்பி வைத்து விட்டு சொந்த வேலைக்கு சென்றுவிடுவது போன்ற புகார்கள் ஆசிரியர்கள் மீது வந்தன.

இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்படி ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் வகுப்பறைக்கு வந்ததும் செல்     ஃபி எடுத்து காலை 8 மணிக்குள்ளாக கல்வித்துறை இணைய தளத்தில் பதிவேற்றம் செய்துவிட வேண்டும்.

இவ்வாறு ஆசிரியர்களுக்கு அட்டென்டென்ஸ் போடப்படுகிறது. இந்த முறையில் சுமார் 7 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் பாரபங்கி மாவட்டத்தில் தங்களது வருகையை பதிவு செய்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி வி.பி.சிங் கூறுகையில், ‘மாவட்ட கல்வி இணைய தளத்தில் ஆசிரியர்கள் செல்பியை பதிவு செய்வார்கள். இது ஆட்டோ மேட்டிக் முறையில் ஆய்வு செய்யப்பட்டு வருகை பதிவு உறுதி செய்யப்படும்.' என்றார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................