''அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை கராத்தே, குங்ஃபூ பயிற்சி''

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மாணவிகளுக்கு தற்காப்பு கலை கற்றுத் தரும் நடவடிக்கையை எடுத்துள்ளது மத்திய அரசு.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''அரசுப் பள்ளிகளில் மாணவிகளுக்கு 6 முதல் 8-ம் வகுப்பு வரை கராத்தே, குங்ஃபூ பயிற்சி''

இந்த திட்டத்திற்காக மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு மத்திய அரசு வழங்கும்.


New Delhi: 

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு கலை பயிற்சி வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாட்டின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சட்ட ரீதியில் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றன. 

இதன் ஒரு பகுதியாக மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்படும். 

இதற்காக அரசுப் பள்ளிகளுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநில அரசுகளும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. 

இதற்காக மகளிர், குழந்தைகள் நலத்துறை வழங்கும் நிதி மற்றும் மத்திய அரசின் மத்திய திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. 
 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................