வீராட் கோலியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஷேவாக்

ஷேவாகின் பதிவானது ‘இந்த தாந்திராஸ் நாளில்,உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் ரன்திரோயோசியாக ஆக அமைய வாழ்த்துகிறேன்’

 Share
EMAIL
PRINT
COMMENTS
வீராட் கோலியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஷேவாக்

இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடி வரும் கிரிக்கெட் நட்சத்திரமான வீராட் கோலிக்கு நள்ளிரவு முதல் ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் ஷேவாக், தற்போதைய கேப்டன் விராட் கோலிக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறினார். அவ்வாழ்த்து எல்லாவரையும் சிரிக்க வைத்தது.

ஷேவாக் ட்விட்டரில் இத்தகைய வாழ்த்துக்களை பகிர்வதற்கு பிரபலமானவர். வீராட் கோலியின் பிறந்தநாளுக்கும் தனது வழக்கத்தை மாற்றவில்லை.

ஷேவாகின் பதிவானது ‘இந்த தாந்திராஸ் நாளில் உங்களுக்கு இந்த வருடம் முழுவதும் ‘ரன்'திரோயோசியாக ஆக அமைய வாழ்த்துகிறேன்' என கூறி தனது சார்பில் வாழ்த்தை தெரிவித்தார். தாந்திராஸ் என்பது தீபாவளிக்கு கொண்டாடத்தின் முதல்நாள் ஆகும். ‘தனம்' என்றால் பணம் என்று பொருள். இந்நாளில் செல்வம் தரும் லட்சுமியை வணங்கினால் செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது. பணம் பெருகும் நாளில் இந்த வருடம் முழுவதும் ரன்களால் நிறைய வேண்டும் என்று தன் வாழ்த்தினை தெரிவித்திருந்தார் ஷேவாக்

இந்தப் பதிவு வீராட் கோலியின் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷேவாகின் இந்த வாழ்த்திற்க்கு பல்லாயிரம் லைக்குகளும்,பதில்களும் ட்விட்டரில் வந்துகொண்டே இருக்கின்றன.

இதை போல் ஷேவாக் தனது மனைவி ஆர்த்திக்கும் மற்றும் நடிகர் ஷாருக்கானுக்கு போட்ட பிறந்தநாள் வாழ்த்துப் பதிவுகளும் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................