“மோசஸ்… நபிகள் நாயகம்… அப்புறம் ரஜினி…”- சீமான் கலாய்!!

Seeman about Rajini - "தமிழ்நாட்டு மக்களை இவர் எந்த அளவுக்கு மடையர்கள் என்று நினைத்து வைத்துள்ளார் என்பதைத்தான் இது காட்டுகிறது"

“மோசஸ்… நபிகள் நாயகம்… அப்புறம் ரஜினி…”- சீமான் கலாய்!!

Seeman about Rajini - "அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் இளைஞர்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டும்"

Seeman about Rajini - நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரியை தீவிரமாக எதிர்த்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான், ரஜினியின் செயல்பாடுகளை கிண்டல் கலந்த தொனியில் விமர்சித்துள்ளார். 

இன்று சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு நிருபர், “ரஜினி, அவரின் பிறந்தநாளன்று புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து வெளிநாடுகளில் கட்சி சார்ந்த நிர்வாகிகளை நியமித்து வருவதாகவும் பேசப்படுகிறது. அது பற்றி…” என்று கேட்க,

சீமான், “அவருக்கு இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு. அவ்வளவுதான். பெரிய மோசஸ், நபிகள் நாயகம் போல 10 கட்டளையை ஊடகங்கள் முன்னிலையில் உதிர்ப்பார். அந்த 10 கமாண்டுமென்ட்ஸை வைத்துக் கொண்டு ஊடகங்களும் தொடர்ந்து பேசி வரும். தமிழ்நாட்டு மக்களை இவர் எந்த அளவுக்கு மடையர்கள் என்று நினைத்து வைத்துள்ளார் என்பதைத்தான் இது காட்டுகிறது. 

அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தின் இளைஞர்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டும். எப்போதும் கட்சி ஆரம்பிக்கப் போறேன், ஆரம்பிக்கப் போறேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார் ரஜினி. ஆனால், ஆரம்பிப்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை,” என்று கேலியாக பேசியுள்ளார். 

More News