“மோடி, அமித்ஷா, பாஜககாரங்க முதல்ல குடியுரிமையை நிரூபிங்க…”- கொதி கொதிக்கும் சீமான்!!

Seeman against CAA - "இந்துக்களுக்கும் அது எதிரானதுதான்"

“மோடி, அமித்ஷா, பாஜககாரங்க முதல்ல குடியுரிமையை நிரூபிங்க…”- கொதி கொதிக்கும் சீமான்!!

Seeman against CAA - "குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாட்டில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது"

Seeman against CAA - சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டமான சிஏஏவுக்கு எதிராகத் தமிழக அளவிலும் தேசிய அளவிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. சென்னையின் வண்ணாரப்பேட்டையில் சில நாட்களுக்கு முன்னர் சிஏஏவுக்கு எதிராகத் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிஏஏவுக்கு எதிராகக் கொதி கொதித்துப் பேசியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

“குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாட்டில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அது என்னமோ முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று சொல்லப்படுகிறது. அந்த கருத்தே தவறானது. மொத்தமாக நாட்டில் இருக்கும் அனைத்துக் குடிகளுக்கும் அந்தச் சட்டம் எதிரானதாகவே இருக்கிறது. 

இந்துக்களுக்கும் அது எதிரானதுதான். இந்துக்களின் விழாக்களில் புனித நீராடும், அதில் கலந்து கொள்ளும் சாதுக்களுக்கு தங்களது குடியுரிமையை நிரூபிக்க எதாவது ஆதாரங்கள் இருக்கின்றனவா. இந்த நாட்டில் இருக்கும் பல கோடி பழங்குடியினருக்கு எதாவது சான்றிதழ்கள் இருக்கின்றனவா. அந்த வகையில் பார்க்கும் போது, இந்தச் சட்டம் எவ்வளவு குழப்பங்களை உருவாக்குகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். 

இந்தச் சட்டம் தூக்கியெறியப்பட வேண்டும். அப்படிக் கொண்டு வந்தாக வேண்டும் என்று முடிவெடுத்தார்கள் என்றால், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக காரர்கள் அவர்களின் குடியுரிமையை நிரூபிக்கட்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு வரட்டும்,” என்று ஆதங்கத்துடன் பேசினார் சீமான்.

Listen to the latest songs, only on JioSaavn.com