“கமலுக்கு அந்த தகுதி இருக்கு, Rajini-க்கு இல்லை..?”- ஒப்பிட்டு விமர்சித்த Seeman!

Seeman on Rajini - "தமிழ் நிலத்தில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை என்பதே, தமிழர்களை இழிவுபடுத்தும் கருத்து"

“கமலுக்கு அந்த தகுதி இருக்கு, Rajini-க்கு இல்லை..?”- ஒப்பிட்டு விமர்சித்த Seeman!

Seeman on Rajini - "ரஜினியின் எண்ணம் முழுவதும் முதல்வர் ஆவதில்தான் உள்ளது."

Seeman on Rajini - ‘தமிழக அரசியல் களத்தில் ஆளுமையுள்ள தலைவருக்கான வெற்றிடம் உள்ளது,' என்று நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் கருத்து கூறியிருந்தார். அதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான் (Seeman) கடும் கண்டனங்களைத் தெரிவித்து விமர்சனம் செய்துள்ளார். 

செய்தியாளர்கள் மத்தியில் ரஜினியின் கருத்து பற்றி பேசிய சீமான், “ரஜினி, ஒரு நடிகர். தமிழகத்தின் உச்சபட்ச இயக்குநர், இசை அமைப்பாளர், நடிகை என எல்லோரையும் தன் படத்தில் வைத்துக் கொண்டு ஹிட் கொடுக்கிறார். அவர் ஆளுமையைப் பற்றி எப்படி பேசலாம். தனியாக கதை, வசனம், திரைக்கதை எழுதி படம் எடுத்திருக்கிறாரா. கமல் கூட அதையெல்லாம் செய்திருக்கிறார். அவர் பேசலாம், ஆளுமையைப் பற்றி.

3grrg2a8

தமிழ் நிலத்தில் ஆளுமையுள்ள தலைவர்கள் இல்லை என்பதே, தமிழர்களை இழிவுபடுத்தும் கருத்து. பெரும் அறிஞர்களும், வல்லுநர்களும் வாழ்ந்த நிலம் இது. இளைஞர்கள், அரசியல் தெளிவுடன் துடிப்பாக இருக்கும்போது, இப்படி ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது.

ரஜினியின் எண்ணம் முழுவதும் முதல்வர் ஆவதில்தான் உள்ளது. திரைப்படங்களில் காட்டுவது போல, அமெரிக்க மாப்பிள்ளை, இரண்டாவது ஹீரோவெல்லாம் கிடையாது. நேரடியாக கதாநாயகன்தான். அப்படித்தான் நேரடியாக முதல்வராக வேண்டும் என்று நினைக்கிறார். 

fp4mjmv

வெறுமனே திரைத்துறை பிரபலத்தை வைத்துக் கொண்டு இனியும் ஒருவர் இந்த நாட்டை ஆள முடியாது. எம் தமிழ் மக்கள் அதற்கு இனி இடம் கொடுக்க மாட்டார்கள்,” என்றார் உறுதிபட. 
 

More News