கூகுளில் ‘தானோஸ்’-ஐ தேடினால் நடக்கும மாயம்..! #AvengersEndgame #Thanos

Thanos gauntlet: அவெஞ்சர்ஸ் வரிசையில் ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்’ திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது(google thanos)

கூகுளில் ‘தானோஸ்’-ஐ தேடினால் நடக்கும மாயம்..! #AvengersEndgame #Thanos

Thanos gauntlet: Google Thanos: அவெஞ்சர்ஸ் படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'அவெஞ்சர்ஸ் ஆந்தம்' பாடலை கம்போஸ் செய்துள்ளார்.

அவெஞ்சர்ஸ் வரிசையில் ‘அவெஞ்சர்ஸ்: எண்டு கேம்'('Avengers: Endgame') திரைப்படம் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது. சூப்பர் ஹீரோ படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படும் அவெஞ்சரஸுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அவெஞ்சர்ஸ்: எண்டு கேம் திரைப்படத்தின் பிரதான வில்லன் கதாபாத்திரம் ‘தானோஸ்' (Thanos). அந்த கதாபாத்திரத்தின் சூப்பர் பவர்களில் ஒன்று, காலத்தை கட்டுப்படுத்துவது. ஒரு சொடக்கில் அனைத்து பொருட்களையும் தவிடுபொடியாக்கும் சக்தி படைத்ததுதான் தானோஸ்(Thanos gauntlet) கதாபாத்திரம். அந்த தானோஸ் குறித்து கூகுளில்(Google Thanos) தேடினால் ஒரு ரிசல்ட் பக்கம் வருகிறது. அந்தப் பக்கத்தின் வலது ஓரத்தில் தானோஸின் கை உரையான ‘கான்ட்லெட்' (thanos gauntlet icon)உள்ளது. அந்த கான்ட்லெட்டை சொடக்கினால், சர்ச் ரிசல்ட்ஸ் மாயமாகிறது. 

இந்த அம்சம் அவெஞ்சர்ஸ ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. நீங்களும் ஒரு முறை முயற்சிக்கலாமே. சர்ச் ரிசல்ட் மீண்டும் வேண்டுமென்றால், கான்ட்லெட்டை மறுமுறை சொடக்கினால் போதும். 

அவெஞ்சர்ஸ் படத்துக்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'அவெஞ்சர்ஸ் ஆந்தம்' பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்தப் பாடல் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் எண்டு கேம் திரைப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களுக்கு நடிகை ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.