சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: ஆட்சியர்கள் அறிவிப்பு

விடிய விடிய கனமழை பெய்தாலும் காலாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: ஆட்சியர்கள் அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும்: ஆட்சியர்கள்சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் வழக்கம்போல், பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துள்ள நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னை ராயப்பேட்டை, மயிலாப்பூர், வளசரவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இடிமின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலையிலும் நீடித்தது. அண்ணா நகர், வடபழனி, கிண்டி, மீனம்பாக்கம், விருகம்பாக்கம், போரூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு மழை நீடித்தது. இதேபோல் சென்னையை அடுத்துள்ள மாதவரம், புழல், செங்குன்றம், சோழவரம், பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது, தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்படும் என சிறுவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்த நிலையில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர்கள் கீதா லட்சுமி, மகேஸ்வரி, பொன்னையா அறிவித்துள்ளனர்.

விடிய விடிய கனமழை பெய்தாலும் காலாண்டு தேர்வு நடப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை என்று ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலங்கானா வரை நீண்டுள்ளது. இந்த சுழற்சி காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................