டெல்லியில் ஜூலை 31-ம்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை! கொரோனா பாதிப்பால் அரசு நடவடிக்கை

ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பெற்றோர் உதவியுடன் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுத்தருவது உள்ளிட்டவை  தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

டெல்லியில் ஜூலை 31-ம்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை! கொரோனா பாதிப்பால் அரசு நடவடிக்கை

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட 2-வது  மாநிலமாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் டெல்லி இருக்கிறது. 

ஹைலைட்ஸ்

  • டெல்லியில் பள்ளிகளை திறப்பது குறித்து துணை முதல்வர் முக்கிய ஆலோசனை
  • பள்ளிகளுக்கு ஜூலை 31 வரைக்கும் விடுமுறை அளிப்பதற்கு முடிவு
  • ஆன்லைன் வகுப்புகளை டெல்லியில் தொடர்ந்து நடத்துவதற்கு கூட்டத்தில் முடிவு
New Delhi:

கொரோனா பாதிப்பின் தீவிரம் குறையாத நிலையில் டெல்லியில் பள்ளிகளுக்கு ஜூலை 31ம் தேதி வரையில் விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான  அறிவிப்பை டெல்லியின் துணை முதல்வர் மனிஷ்  சிசோடியா அறிவித்துள்ளார். 

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட 2-வது  மாநிலமாக, மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் டெல்லி இருக்கிறது. 

இந்த  நிலையில் பள்ளிகள் திறப்பது, மாணவர்களுக்கான  கல்வி  உள்ளிட்டவை குறித்து இன்று விவாதிக்கப்பட்டது.  இதில் மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை 50 சதவீதம் அளவுக்கு குறைக்கலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கிடையே ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பெற்றோர் உதவியுடன் மாணவர்களுக்கு பாடங்கள் கற்றுத்தருவது உள்ளிட்டவை  தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

மாணவர்களும்,  அவர்களது பெற்றோரும் அச்சம் கொள்ளாத வகையில் பள்ளிகளை  திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். 

அவர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட வல்லுனர்கள், 9 மற்றும் 10 வகுப்பு மாணவர்களுக்கு வாரம் 2 முறை நேரில் வகுப்பு  நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.  ஒரு தரப்பினர் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து நாட்களிலும் வகுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

கூட்டத்தில் ஆன்லைன் வகுப்புகளை தொடர்ந்து நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது.  வாய்ப்புள்ள இடங்களில்  பள்ளிகளை திறக்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.