உ.பி-யில் பள்ளிக் குழந்தைகளுடன் நீரில் சிக்கிக் கொண்ட பேருந்து… கை கொடுத்த இளைஞர்கள்! #Video

பேருந்து எப்படி, பாலத்துக்கு அடியில் இருந்த வெள்ள நீரில் சிக்கியது என்பது குறித்து தகவல் இல்லை

உ.பி-யில் பள்ளிக் குழந்தைகளுடன் நீரில் சிக்கிக் கொண்ட பேருந்து… கை கொடுத்த இளைஞர்கள்! #Video
Lucknow:

உத்திர பிரதேசத்தில் உள்ள ரயில்வே பாலத்துக்கு அடியில் இருந்த நீரில் ஒரு பேருந்து பள்ளிக் குழந்தைகளுடன் மாட்டிக் கொண்டது. அப்போது சம்பவ இடத்துக்கு வந்த இளைஞர்கள் பேருந்துக்குள் இருந்த குழந்தைகளை கை கொடுத்து காப்பாற்றியுள்ளனர். 

லக்னோவிலிருந்து 197 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ராம்நகாரியா. அங்கு உள்ள ரயில்வே பாலத்துக்கு அடியில் தான் பள்ளிப் பேருந்து சிக்கிக் கொண்டது. சமீபத்தில் பெய்த மழையால் பாலத்துக்கு அடியில் நீர் புகுந்ததாக தெரிகிறது. கிட்டத்தட்ட பேருந்தின் ஜன்னல் வரை நீர் வந்துள்ளதால், உள்ளே இருந்த பள்ளிக் குழந்தைகள் பதற்றமடைந்துள்ளனர். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் உடனடியாக பேருந்துக்கு மேலே ஏறி, குழந்தைகளை கை கொடுத்து தூக்கி காப்பாற்றியுள்ளனர். இதனால், உயிர்ச்சேதம் எதுவும் இல்லாமல் பேருந்த்துக்கு உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். 

இந்த சம்பவம் குறித்து உத்திர பிரதேச மாநில காவல் துறை, தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் மீட்பு நடவடிக்கையின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளது. வீடியோவுடன், ‘பாலத்துக்கு அடியிலிருந்த நீரில் பேருந்துடன் குழந்தைகள் சிக்கிக் கொண்டனர் என்று எங்களுக்குத் தகவல் வந்த உடனே, நாங்கள் சிலரை அங்கு அனுப்பினோம். அவர்கள் தான் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

பேருந்து எப்படி, பாலத்துக்கு அடியில் இருந்த வெள்ள நீரில் சிக்கியது என்பது குறித்து தகவல் இல்லை.