பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரிய வழக்கு… முக்கியத் தீர்ப்பு!

இந்த வழக்கை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது

 Share
EMAIL
PRINT
COMMENTS
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரிய வழக்கு… முக்கியத் தீர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள கருணை மனு குறித்து முடிவெடுக்குமாறு தமிழக ஆளுநரை கேட்டுள்ளது உச்ச நீதிமன்றம். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது தமிழக அரசு. 

இந்த வழக்கை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் ஆகிய மூவர் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது. இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ‘குற்றம் சுமத்தப்பட்ட 7 பேர் குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உரிமையுண்டு. அவர்கள் ஆளுநருக்கு விடுதலை குறித்து பரிந்துரை செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி வாதிட்ட மத்திய அரசு, ‘குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ஏற்க முடியாது. அப்படி குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டால், அது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். சர்வதேச அளவிலும் விளைவுகளை ஏற்படுத்தும்’ என்று வாதிட்டது. 

இந்நிலையில் முக்கியமான தீர்ப்பளித்து வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................