ஜூன் மாதத்தில் நடக்கவுள்ள எஸ்.பி.ஐ (பி.ஓ) தேர்வு: அட்மிட் கார்டுகளை எப்படி பெறுவது?

இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து போட்டியாளர்களும், எஸ்.பி.ஐ (பி.ஓ) தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டுகளை, தங்கள் இணையதளமான sbi.co.in-லேயே சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம்

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஜூன் மாதத்தில் நடக்கவுள்ள எஸ்.பி.ஐ (பி.ஓ) தேர்வு: அட்மிட் கார்டுகளை எப்படி பெறுவது?

எஸ்.பி.ஐ (பி.ஓ) தேர்வு: அட்மிட் கார்டுகளை எப்படி பெறுவது?


New Delhi: 


ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஆண்டுக்கு ஒரு முறை தங்கள் வங்கியில் காலியாக உள்ள புரோபஷனரி அதிகாரிகளுக்கான(PO) இடங்களை நிறப்ப தேர்வுகள் நடத்தும். அப்படி இந்த ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வு, ஜூன் மாதத்தில் 8, 9, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடக்கவுள்ளது. அந்த தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டுகள் இன்று வெளியாகியுள்ளன. இந்த தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து போட்டியாளர்களும், எஸ்.பி.ஐ (பி.ஓ) தேர்வு எழுதுவதற்கான அட்மிட் கார்டுகளை, தங்கள் இணையதளமான sbi.co.in-லேயே சென்று டவுன்லோட் செய்துகொள்ளலாம் என அறிவித்துள்ளது. மொத்தம் 100 கேள்விகள் கொண்ட இந்த தேர்வில், ஆங்கிலம், ஆப்டிட்யூட் மற்றும் ரீசனிங் ஆகிய பகுதிகளில் கேள்விகள் கேட்கப்படவுள்ளது. 

இதில் தேர்ச்சி பெற எந்த கட்-ஆப் மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்படாமல், மதிப்பெண்கள் அடிப்படையில் முன் இருப்பவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவர். மதிப்பெண்கள் அடிப்படையில், மொத்தம் உள்ள காலியிடங்களின் எண்ணிக்கையில் 10 மடங்கு எண்ணிக்கைக்குள் உள்ள போட்டியாளர்கள், தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். 

ஜூன் மாதத்தில் முதலில் நடக்கவுள்ள தேர்வுகளின் முடிவுகள், ஜூலை மாதத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறை, சுமார் 2000 காலியிடங்களை எஸ்.பி.ஐ வங்கி நிறப்பவுள்ளது. இதற்காக, தேர்வுகள் மற்றும் நேர்காணல் ஆகியவற்றை நடத்தி ஆட்களை தேர்வு செய்யவுள்ளது.

அட்மிட் கார்டுகளை டவுன்லோட் செய்ய- https://ibpsonline.ibps.in/sbiposmar19/cloea_may19/login.php?appid=80bdcf83036575802a4826fc473057b3சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................