பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கிய சவுதி அரசு!

நாட்டின் பாதுகாப்பிற்கும், உண்மைக்கும் எதிராக செயல்பட்ட காரணத்தினால், கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்

பெண்களுக்கு வாகனம் ஓட்டும் உரிமையை வழங்கிய சவுதி அரசு!

The move is part of Crown Prince Mohammed bin Salman's far-reaching liberalisation drive

ஹைலைட்ஸ்

  • பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்கிற சட்டத்தை திரும்ப பெறும் சவுதி அரசு
  • பெண்களுக்கான ஓட்டுனர் உரிமத்தை வழங்கியுள்ளது
  • முதல் பெண்கள் குழு இன்று ஓட்டுனர் உரிமத்தை பெற்றுக் கொண்டார்கள்
Riyadh: ரியாத்: முதன்முறையாக பெண்களுக்கு வாகன ஒட்டுனர் உரிமத்தை வழங்கியுள்ளது சவுதி அரேபிய அரசு.

“முதல் பெண்கள் குழு இன்று தங்களின் வாகன ஓட்டுரிமத்தை பெற்றுக்கொண்டனர்” என சவுதி ஊடக துறை அறிவித்தது. போக்குவரத்துப் பொது இயக்குநர், உள்நாட்டில் உள்ள சர்வதேச வாகன ஓட்டுரிமையாளர்களுக்கு சவுதி உரிமைங்களை வழங்கினார்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

வரும் ஜூன் 24 ஆம் தேதி,  பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடை விதித்த சட்டத்தை சவுதி அரசு திரும்ப பெற்றுக்கொள்ள உள்ளது. உலகிலேயே, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்குத் தடைவிதித்ததைப் பல ஆண்டுகளுக்குத் திரும்பப் பெறாமல் இருந்த ஒரே நாடு சவுதி அரேபியா என்பது குறிப்பிடத்தக்கது.

 
சவுதி அரேபியாவின் பல இடங்களில், பெண் ஓட்டுநர்களுக்கு ‘வாகன ஓட்டும் தேர்வு’ வைக்கப்பட்டது. வழங்கப்பட்டுள்ள உரிமங்களின் சரியான எண்ணிக்கையை அதிகாரப்பூர்வமாக அரசு இன்னும் வெளியிடவில்லை.

இளவரசர் மொஹமெத் பின் சல்மானின், நாட்டில் உள்ள பிற்போக்கான நிலையை மாற்றி சுதந்தரமாக்கும் பயணத்தின் ஒரு பகுதியாக இவை நடந்துள்ளன எனக் கூறப்படுகிறது.

உலக அளவில் பயணம் மேற்கொண்ட இளவரசர் மொஹமெத், சவுதியில் தேவையான மாற்றங்களை செய்வதற்கு சரியான நேரம் என எண்ணியுள்ளார். பல ஆண்டுகளாக இருக்கும் வரையறைகளையும், பெண்கள் மீதான கட்டுப்பாடுகளையும் மாற்ற முடிவெடுத்துள்ளனர்.

புதிய திட்டத்திற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில், சவுதி அரேபிய அரசு 17 பேரை நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக ஈடுபட்ட காரணங்களினால் கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்கள், ‘பெண்கள் வாகனம் ஓட்டும் உரிமை’ பிரச்சாரத்தில் பணியாற்றிய பெண்கள் எனத் தெரிய வந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட 8 பேர்,  விசாரணை முழுமை அடையும் வரை தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நான்கு பெண்கள் உட்பட ஒன்பது பேர் சந்தேகதிற்குறியவர்கள் என விசாரணையில் வைக்கப்பட்டுள்ளனர். வேறு அமைப்பில் இருந்து ஆட்களை சட்ட விரோதமான முறையில் சவுதி அரசு பதவிகளுக்கு வேலையளித்த குற்றங்கள் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பிற்கும், உண்மைக்கும் எதிராக செயல்பட்ட காரணத்தினால், கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.