"ஜெஃப் பெஸோஸ் பிரச்னைக்கு ஒன்றும் செய்யமுடியாது" - சவுதி அமைச்சர் பதில்!

பத்திரிக்கையாளர் கசோக்கி இஸ்தான்புல் அமீரகத்தில் கொல்லப்பட்டார். இதில் சவுதி மன்னர் முகமது பின் சாலமனுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.

அமெரிக்கன் மீடியா நிறுவனம் தன்னை மிரட்டுவதாகவும், தன் காதலியுடன் உள்ள அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக கூறுவதாகவும் பெஸோஸ் தெரிவித்தார்.

DUBAI:

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் "அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெஃப் பிஸோஸுக்கும் என்கொயரர் அறிக்கைக்கும் சவுதி எதையும் செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.

பெஸோஸ் கடந்த செவ்வாயன்று அமெரிக்கன் மீடியா நிறுவனத்தை புகார் கூறினார். அந்த நிறுவனம் தன்னை மிரட்டுவதாகவும், தன் காதலியுடன் உள்ள அந்தரங்க புகைப்படங்களை வெளியிடப்போவதாக கூறுவதாகவும் பெஸோஸ் தெரிவித்தார்.

பெஸோஸ், கசோக்கி விவகாரத்தில் வாஷிங்டன் போஸ்ட்டின் இணைய செய்தியில் சவுதிக்கு உடன்பாடில்லை என்று கூறியிருந்தார். அதற்கும் இந்த  மிரட்டலுக்கும் தொடர்பிருப்பதாக வாஷிங்க்டன் போஸ்ட்டில் பங்கு வகிக்கும் பெஸோஸ் கூறியுள்ளார்.

"இது அவர்கள் இருவருக்குமான பிரச்னை. இதில் சவுதியை நுழைப்பது அர்த்தமற்றது. இதனை சந்திக்க சவுதி தயார்" என்று அமைச்சர் தெரிவுத்தார். 

Newsbeep

சவுதிக்கும் ஏஎம்ஐக்கும் என்ன தொடர்பு என்று தெரியாது என்று  ஜுபைர் தெரிவித்தார். பெஸோஸ் வழக்கில் விசாரணைக்கு தயார் என்றும் ஏஎம்ஐ தெரிவித்துள்ளது.

பத்திரிக்கையாளர் கசோக்கி இஸ்தான்புல் அமீரகத்தில் கொல்லப்பட்டார். இதில் சவுதி மன்னர் முகமது பின் சாலமனுக்கும் தொடர்பிருப்பதாக கூறப்பட்டது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)