This Article is From Jun 22, 2018

இந்து முன்னணி உறுப்பினர் கொலை,2 பேர் மீது குற்றப்பத்திரிக்கை

இந்து முன்னணியின் பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் இருவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது

இந்து முன்னணி உறுப்பினர் கொலை,2 பேர் மீது குற்றப்பத்திரிக்கை

ஹைலைட்ஸ்

  • 2016 செப்டம்பரில் இந்திய் முன்னணி சசிக்குமார் கொல்லப்பட்டார்
  • என்.ஐ.ஏ விசாரணையை கையில் எடுத்தது
  • 4 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
கோவை, இந்து முன்னணியின் பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் இருவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டிருக்கும் சையது அபுதாஹிர் மற்றும் முகமது முபாரக் ஆகியோர், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள் என்று என்.ஐ.ஏ தரப்பில் கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பட்த்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. “ கொலை குறித்த விசாரணையின் போது, தேசிய புலானாய்வு அமைப்பு, மே 18-ம் தேதி 4 பேரின் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு பாப்புலர் ஃஃபிரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்ட நன்கொடைக்கான ஆவணங்களும், பிரச்சார புத்தகங்களும், சி.டிக்களும், மொபைல் மற்றும் பென்டிரைவும் கிடைத்தது. மேலும், இஸ்லாமிய ஆய்வு அமைப்பின் சாக்கிர் நாயக் பேசிய டி.வி.டியும் கிடைத்தது” என என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஏப்ரல் 7, 2018 அன்று, சதாம் ஹுசேன் மற்றும் சுபைர் என்கிற இரண்டு பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக என்.ஐ.ஏ கூறியுள்ளது.

“இந்து முன்னணியின் சசிக்குமார், செப்டம்பர் 22, 2016 அன்று அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டதாக, துடியலுர் காவல் நிலையத்தில் 23 செப்டம்பர் 2016 அன்று பதிவு வழக்கு செய்யப்பட்டது.” என்கிறது என்.ஐ.ஏ. அதற்கு பின் 16 மாதங்கள் கழித்து மத்திய உள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டலின் பேரில் என்.ஐ.ஏ விசாரணையை கையில் எடுத்தது.

“ விசாரணையில், அபு, சதாம், சுபைர், முபாரக் மற்றும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவுடன் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள், சசிக்குமாரை படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது” என என்.ஐ.ஏ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.