This Article is From Aug 02, 2019

சரவணபவன் ஹோட்டல் உணவை சாப்பிட்டவருக்கு ஃபுட் பாய்சன் : ரூ. 1.10 லட்சம் அபராதம்

நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதமும் ரூ. 10 ஆயிரம் வழக்கு நடத்திய செலவையும் கொடுக்க உத்தரவிட்டுள்ளது.

சரவணபவன் ஹோட்டல் உணவை சாப்பிட்டவருக்கு ஃபுட் பாய்சன் : ரூ. 1.10 லட்சம் அபராதம்

உணவு சாப்பிட்ட சில மணிநேரங்களில் கடுமையான வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்றவற்றால் அவதிபடத் தொடங்கியுள்ளார்

Chennai:

தமிழ்நாட்டின் பிரபலமான சரவணபவன்  உணகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் ரூ. 1.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளருக்கு வழங்கிய உணவில் குறைபாடு காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

2014 ஆம் ஆண்டு அண்ணாசாலையில் உள்ள சரவணபவனில் உணவு சாப்பிட்டதால் ஏற்பட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக எஸ்.கே. சாமி என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட ‘மன உளைச்சலுக்கு ஒரு லட்சமும் ரூ. 10,000 வழக்கு நடத்தியதற்கான செலவும்' என ரூ. 1லட்சத்து 10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளது. 

சரவணபவன் ஹோட்டல் உணவில் முடி இருந்துள்ளது. அதை கண்ட வாடிக்கையாளர்  மாற்றாக உணவை வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார்.  உணவு சாப்பிட்ட சில மணிநேரங்களில் கடுமையான வயிற்று வலி, வாந்தி, குமட்டல் போன்றவற்றால் அவதிபடத் தொடங்கியுள்ளார். காய்ச்சல் மற்றும் தோலில் தடிப்புகள் தோன்றத் தொடங்கியுள்ளது. அரசு மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டில் அனுமதிக்கப்பட்டார் என்றும் சாப்பிட்ட உணவுதான் விஷமாக மாறியது என்று கூறினார். 

இதனால் வாடிக்கையாளருக்கு தவறான உணவை வழங்கியதற்கு ரூ. 60 லட்சமும் உடல்நலக்குறைவு மற்றும்  அதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ. 30 லட்சமும் தனக்கு வழங்க வேண்டும் என்று புகார்தாரர் கோரினார். 

ஆனால் நீதிமன்றம் ரூ. 1 லட்சம் அபராதமும் ரூ. 10 ஆயிரம் வழக்கு நடத்திய  செலவையும் கொடுக்க உத்தரவிட்டுள்ளது. 

.