சிவசேனாவின் இருக்கைகள் எதிர்க்கட்சி வரிசைக்கு மாற்றப்பட்டன : சஞ்சய் ராவத்

தேசிய ஜனநாயக கூட்டணியில் விட்டு சிவசேனா வெளியேறியதற்கான முறையான அறிவிப்பா இது? என்று கேட்டதற்கு “நீங்கள் அப்படி சொல்லிக் கொள்ளலாம் எந்த பிரச்சினையும் இல்லை” என்றார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கலந்து கொள்ளாது என்று தெரிவித்தார்.

Mumbai:

மகாராஷ்டிரா அரசியலில் ஏற்பட்ட ஆட்சியமைக்கும் போட்டி 30 ஆண்டுகளாக நட்பில் இருந்த பாஜக மற்றும் சிவசேனாவை பிரித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜகவிடமிருந்து விலகிய சிவசேனா மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் வரிசையில் அமரும் என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். “இரண்டு சிவசேனா எம்.பிக்களின் இருக்கைகள் பாராளுமன்றத்தில் மாற்றப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம்” என்று கூறினார். 

பாராளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கவுள்ள நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கலந்து கொள்ளாது என்று தெரிவித்தார்.

பழைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இன்றைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இன்றைய தே.ஜ.கூயின் நிறுவனர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி வெளியேறி விட்டாரா அல்லது செயல்பாடாமல் உள்ளாரா? என்று சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் விட்டு சிவசேனா வெளியேறியதற்கான முறையான அறிவிப்பா இது? என்று கேட்டதற்கு “நீங்கள் அப்படி சொல்லிக் கொள்ளலாம் எந்த பிரச்சினையும் இல்லை” என்றார். 

மகாராஷ்டிர  மாநில ஆட்சியில்  சரிசமமான அதிகார பகிர்வினை சிவசேனா கேட்டது. ஆனால், அதற்கு பாஜக ஒப்புக் கொள்ளாத நிலையில் 30 ஆண்டுகால பாஜக சிவசேனா கூட்டணி முறிந்தது. தற்போது மகாராஷ்டிரா ஆட்சியைக் கைப்பற்ற சிவசேனா, காங்கிரஸ் மற்றும் என்.சி.பி உடன் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணி பலத்துடன் சிவசேனா ஆளும் உரிமையை மாநில ஆளுநரிடம் கேட்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஹைலைட்ஸ்

  • Shiv Sena will sit in opposition benches in Rajya Sabha
  • Winter session of parliament will start on Monday
  • Sanjay Raut said Sena won't attend NDA meeting
More News