This Article is From Jul 30, 2019

“அவெஞ்சர்ஸுக்கு ‘தானோஸ்’… கே.ஜி.எஃப்-க்கு ‘அதீரா’…”- வில்லன் அவதாரம் எடுக்கும் சஞ்சய் தத்!

மார்வெல் சினிமாஸின், அவெஞ்சர்ஸ்: எண்டுகேம் திரைப்படத்தில் வில்லனாக தோன்றிய கதாபாத்திரம்தான் தானோஸ்.

“அவெஞ்சர்ஸுக்கு ‘தானோஸ்’… கே.ஜி.எஃப்-க்கு ‘அதீரா’…”- வில்லன் அவதாரம் எடுக்கும் சஞ்சய் தத்!

கே.ஜி.எஃப் 2-வில் சஞ்சய் தத், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

ஹைலைட்ஸ்

  • மிகவும் சக்திவாய்ந்த கேரக்டர் அதீரா: சஞ்சய் தத்
  • அதீராவில் ஃபர்ஸ்ட் லுக், சஞ்சய் தத்தின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்டது
  • நடிகர் யஷ், ஃபர்ஸ்ட் லுக்கை ரிலீஸ் செய்தார்
New Delhi:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், சில நாட்களுக்கு முன்னர் தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதே நாளில் சினிமா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸையும் கொடுத்தார். கன்னடத்தில் உருவாகி, இந்திய அளவில் ஹிட் அடித்த ‘கே.ஜி.எஃப்' படத்தின் இரண்டாம் பாகத்தில் தத் நடிக்க உள்ளது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டது. கே.ஜி.எஃப் 2-வில் சஞ்சய் தத், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அது குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து தத், “அதீரா கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கும். அவேஞ்சர்ஸ் திரைப்படங்களைப் பார்த்திருந்தால் உங்களுக்கு தானோஸைத் தெரிந்திருக்கும். அதீரா, அந்த கதாபாத்திரத்தைப் போன்றதுதான். மிகவும் ஆபத்தான ஒப்பனைகள் கொண்ட ஆபத்தான கேரக்டர் அதீரா. அதைத்தான் நானும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். 

சஞ்சய் தத், கே.ஜி.எஃப்-ல் இப்படித்தான் இருப்பார்:

மார்வெல் சினிமாஸின், அவெஞ்சர்ஸ்: எண்டுகேம் திரைப்படத்தில் வில்லனாக தோன்றிய கதாபாத்திரம்தான் தானோஸ். மிகவும் சக்திவாய்ந்த வில்லனாக அறியப்பட்டவர் தானோஸ். 

கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தில் சஞ்சய் தத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அறிமுகம் செய்த திரைப்படத்தின் கதாநாயகன் யஷ், “60 வயது ஆவதால் இந்த நாயகனின் அழகு குறைந்துவிடாது. உங்களின் புகழ் ஓங்கட்டும் சஞ்சய் தத். பிறந்தநாள் வாழ்த்துகள். கே.ஜி.எஃப் உலகத்துக்கு உங்களை வரவேற்கிறேன்” என்று இனஸ்டாகிராமில் பகிர்ந்தார். 

(PTI தகவல்களுடன்)

.