சானியாமிர்சா நடித்த விளம்பரத்தை தடை செய்ய உத்தரவு

இதன் பாதிப்புகள் குறித்து சானியாமிர்சாவிடம் கூறி, விளம்பரத்தில் இருந்து விலகுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது

சானியாமிர்சா நடித்த விளம்பரத்தை தடை செய்ய உத்தரவு

Sania Mirza's advertisement "falsely" claims that the poultry sector is not "misusing" antibiotics: CSE

ஹைலைட்ஸ்

  • சானியா நடித்த தனியார் கோழிப்பண்ணை விளம்பரம் சர்ச்சையாகியுள்ளது
  • தவறான கருத்தைப் வலியுறுத்துவதாக உள்ளது என கூறப்பட்டுள்ளது
  • அந்த விளம்பரத்தைத் தடைசெய்ய விளம்பர கவுன்சில் உத்தரவு
New Delhi: டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா நடித்த கோழிப்பண்ணை விளம்பரத்தைத் தடை செய்யவேண்டுமென இந்திய விளம்பர கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தனியார் கோழிப்பண்ணை நிறுவனம் தயாரித்துள்ள விளம்பரத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா நடித்திருந்தார். அதில் கோழிக்கறி உடலுக்கு ஆரோக்கியமானது என்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. கோழியின் வளர்ச்சிக்கு தரப்படும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் (antibiotics) தவறாக பயன்படுத்தப்படுவதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் 2014ம் ஆண்டில் நடத்திய ஆய்வு தெரிவிப்பதால், அதற்கு எதிராக இந்த விளம்பரம் அமைந்துள்ளது. மேலும் டென்னிஸ் வீராங்கனை சானியாமிர்சா இந்த விளம்பரத்தில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில், கோழிப்பண்ணைகளில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அதிகமாக கோழிகளுக்கு தரப்படுகிறது. இதன் பாதிப்புகள் குறித்து சானியாமிர்சாவிடம் கூறி, விளம்பரத்தில் இருந்து விலகுமாறு அவரிடம் வலியுறுத்தப்பட்டது.

மேலும் இந்த விவகாரம் இந்திய விளம்பர கவுன்சிலிடம் சென்றது. அதை விசாரித்த இந்திய விளம்பர கவுன்சில், இந்த விளம்பரம் ‘தவறான’ அல்லது ‘மாறுபட்ட’ கருத்தை வலியுறுத்துவதாக உள்ளது. எனவே, இந்த விளம்பரத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என அந்த தனியார் கோழிப்பண்ணை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டள்ளது.