இதுதான் உண்மையான நான் : மேக்கப் இல்லாத வீடியோவை வெளியிட்ட சமீரா ரெட்டி

என்னைப்பற்றி தீர்ப்பு எழுதும் உங்களின் கருத்துகள் குறித்து எந்தவொரு பயமும் இல்லை.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இதுதான் உண்மையான நான் : மேக்கப் இல்லாத வீடியோவை வெளியிட்ட சமீரா ரெட்டி

வீடியோவில் உள்ள சமீரா ரெட்டியின் தோற்றம். (Image courtesy: reddysameera)


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. சமீரா ரெட்டி தன்னுடைய இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார
  2. இதுதான் உண்மையான நான் - சமீரா ரெட்டி
  3. இதுதான் என்னுடிஅய காலை நேரத் தோற்றம்.

நடிகை சமீரா ரெட்டி தன்னுடைய இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். கர்ப்பமாக இருக்கும் சமீரா ரெட்டி தொடர்ந்து சமீபகாலமாக இண்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஒவ்வொரும் தங்களின் இயல்பான அழகை கொண்டாடுவோம் என்ற மையக்கருத்து வெளிப்படுத்தும் விதமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். 

சமீரா மேக்கப் ஏதுமில்லாமல் தன்னுடைய வீடியோவை பகிர்ந்து கொண்டு “இதுதான் உண்மையான நான்! நான் மீண்டும் திரும்பி வருவேன். என்னைப்பற்றி தீர்ப்பு எழுதும் உங்களின் கருத்துகள் குறித்து எந்தவொரு பயமும் இல்லை. இதுதான் காலை நேர தோற்றம். அதைக்கொண்டாடுவது மட்டுமே முக்கியம்” என்று எழுதி #imperfectlyperfect என்ற ஹேஸ்டேக்கையும் சேர்த்துள்ளார். 

வீடியோவில் பெண்களின் அழகு குறித்து இதுவரை சொல்லப்பட்ட கருத்துகள் அனைத்தையும் உடைத்து தன் இயல்பையே நேசிப்பதுதான் அவசியம் என்பது போன்ற தலைப்புகளில் ஒரு தொடரை சமீரா தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருகிறார். 

சமீரா ரெட்டி அக்‌ஷய் வர்தேவும் ஜனவரி 21, 2014 அன்று திருமணம் செய்து கொண்டனர். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................