This Article is From Jul 03, 2019

இந்தியா முழுவதும் 300 ஜிம்களை திறக்க இந்தி நடிகர் சல்மான் கான் திட்டம்!!

நாடு முழுவதும் இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் HRX ஃபிட்ஜெஸ் ஜிம்களை அமைத்து வருகிறார்.

இந்தியா முழுவதும் 300 ஜிம்களை திறக்க இந்தி நடிகர் சல்மான் கான் திட்டம்!!

இந்தி நடிகர் சல்மான் கான்.

ஹைலைட்ஸ்

  • ஃபிட்னெஸ் அடையாளமாக சல்மான் கான் பார்க்கப்படுகிறார்
  • கட்டுக் கோப்பான உடலுக்காக சல்மான் பாராட்டுகளை பெற்று வருகிறார்
  • 2020-க்குள் அவர் 300 ஜிம்கள் திறக்க முடிவு செய்துள்ளார்.
Mumbai:

இந்தியா முழுவதும் 300 ஜிம்களை திறப்பதற்கு இந்தி நடிகர் சல்மான் கான் திட்டமிட்டுள்ளார். கட்டுக்கோப்பான உடலுக்காக பாராட்டுக்களை பெற்றுவரும் சல்மான் கான் எஸ்.கே. -27 என்ற பெயரில் மும்பையில் ஜிம்மை திறக்க உள்ளார். 

2020-க்குள் அவர் நாடு முழுவதும் 300 ஜிம்களை திறக்க திட்டமிட்டிருக்கிறார். முன்னதாக மனிதநேயத்தை காப்போம் என்ற அடிப்படையில் Being Human என்ற பிரசாரத்தை மேற்கொண்டிருந்தார். தற்போது Being Strong Fitness என்ற பிரசாரத்தை தொடங்கியுள்ளார். 

நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் ஃபிட்டாக வைக்க வேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது எஸ்.கே.-27 ஜிம்மின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது. 

ஏப்ரல் மாதத்தின்போது சல்மான் கான் Being Strong ஃபிட்னெஸ் உபகரண நிறுவனத்தை தொடங்கினார். அது தற்போது நாடு முழுவதும் 175 கிளைகளை அமைத்திருக்கிறது. 
 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.