இந்த ஐஏஎஸ் அதிகாரிதான் அமித் ஷாவின் பிஏ

சாகத் குமார் 2009 ஆண்டு ஐஏஎஸ் பேட்சினை சேர்ந்த பீகார் மாநில அதிகாரியாவார். கடந்த ஆண்டு மனோஜ் சின்காவின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்த ஐஏஎஸ் அதிகாரிதான்  அமித் ஷாவின் பிஏ

2009 ஆண்டு ஐஏஎஸ் பேட்சினை சேர்ந்த பீகார் மாநில அதிகாரியாவார்


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. சாகத் குமார் அமித் ஷாவின் தனிப்பட்ட செயலாளராக செயல்படுவார்.
  2. சாகத் குமார் 2023 வரை பணியில் இருப்பார்
  3. பீகாரச் சேர்ந்தவர் 2009 ஐஏஎஸ் பேட்ச்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தனிப்பட்ட செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் என அரசாணை வெளியாகியுள்ளது. ஐஏஸ் அதிகாரி சாகத் குமார் 2023 ஆம் ஆண்டு ஜூலை வரை செயலாளர் பணியில் இருப்பார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர் அமைச்சகம் இந்த அமைச்சகம் ஆணையை வெளியிட்டுள்ளது.

சாகத் குமார் 2009 ஆண்டு ஐஏஎஸ் பேட்சினை சேர்ந்த பீகார் மாநில அதிகாரியாவார். கடந்த ஆண்டு மனோஜ் சின்காவின் தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். பின் தொலை தொடர்பு மற்றும் ரயில்வேயின் செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார்.

மற்றொரு அரசாணையில் இம்கொங்லா ஜமீர் என்ற ஐஏஎஸ் அதிகாரி,  டெக்ஸ்டைல், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சரான ஸ்மிரிதி இராணிக்கு தனிப்பட்ட செயலாளராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜமீர் 2002 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியாவர். 2015 ஆம் ஆண்டில் மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிரிதி இராணிக்கு  தனிப்பட்ட செயலாளராக நியமிக்கப்பட்டவர். 

மத்திய அரசு அதிகாரி அஷிஷ்  குமார்,  மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு தனிப்பட்ட செயலாளாராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இவர் ஆகஸ்ட் 27, 2021 வரை இதில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவர்  2005 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பேட்சினை சேர்ந்த தமிழ்நாடு அதிகாரி. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................