“பிரதமர் மோடியிடம் நோ சொன்னேன்…”- மகாராஷ்டிர அரசியல் ரகசியத்தை உடைத்த Sharad Pawar!

Maharashtra Politics - மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், சென்ற மாதம் யாரும் எதிர்பாராத விதமாக பவார் - மோடி சந்திப்பு நடந்தது

“பிரதமர் மோடியிடம் நோ சொன்னேன்…”- மகாராஷ்டிர அரசியல் ரகசியத்தை உடைத்த Sharad Pawar!

மாநிலப் பிரச்னைக்காகத்தான் பிரதமரை சந்திப்பதாக பவார் தரப்பு சொன்னாலும், எப்படியும் கூட்டணி குறித்துப் பேசப்படும் என்றும் தகவல்கள் பரவின. 

ஹைலைட்ஸ்

  • PM "Modi offered we work together," Sharad Pawar said
  • "I told him that our personal relations are very good," Mr Pawar said
  • "But it's not possible for me to work together," the NCP chief said
Mumbai:

Maharashtra Politics - மகாராஷ்டிராவில் பாஜகவுடன் கூட்டணி அமைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியே தன்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்டதாகவும், ஆனாலும் அதை மறுத்துவிட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (Sharad Pawar) அதிர்ச்சிகர தகவலைத் தெரிவித்துள்ளார். சென்ற வாரம்தான் மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியமைத்தது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் பிரதமர் மோடியுடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் பவார். 

“பிரதமர் மோடி, இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு நான், நம் இருவருக்கும் இடையிலான தனிப்பட்ட நட்பு நல்ல நிலையில் இருக்கிறது. ஆனால், கட்சி ரீதியாக சேர்ந்து செயல்படுவது சாத்தியமில்லை என்று சொன்னேன்,” என்று பகீர் கிளப்பும் தகவலை தெரிவித்துள்ளார் சரத் பவார். 

மோடிக்கும் பவாருக்கும் இடையில் சென்ற மாதம் நடந்த பேச்சுவார்த்தையின் போது, சரத் பவாருக்கு இந்திய ஜனாதிபதி பதவி கொடுக்க பேசப்பட்டதாக ஒரு தகவல் உலவியது. அதை மறுக்கும் அவர், “ஆனால் சுப்ரியா சுலேவுக்கு (பவாரின் மகள்) மோடி அமைச்சரவையில் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட இருந்தது,” என்று கூறி அதிரவைத்துள்ளார். 

மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் குழப்பம் நீடித்து வந்த நிலையில், சென்ற மாதம் யாரும் எதிர்பாராத விதமாக பவார் - மோடி சந்திப்பு நடந்தது. மாநிலப் பிரச்னைக்காகத்தான் பிரதமரை சந்திப்பதாக பவார் தரப்பு சொன்னாலும், எப்படியும் கூட்டணி குறித்துப் பேசப்படும் என்றும் தகவல்கள் பரவின. 

இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் பிரதமர் மோடி, ராஜ்யசபாவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைப் புகழ்ந்து பேசினார். 

மகாராஷ்டிராவில் நிலவிய பலகட்ட குழப்பங்களுக்குப் பிறகு திடீரென்று தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான பாஜக-வுக்கு ஆதரவு தெரிவித்தார். அஜித், துணை முதல்வராக பொறுப்பேற்க, ஃபட்னாவிஸ் முதல்வரானார். பாஜக தலைமையிலான ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத சூழல் நிலவியதால், இருவரும் 3 நாட்களில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள். 

அதைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவால், சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோரியது. சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றார். 

More News