சாண்டாவாக மாறிய சச்சின்

சச்சின் சாண்டாவாக மாறி தன்னுடைய குழந்தைகளுடன் ஆடிப்பாடி அவர்களுக்கு விதவிதமான விளையாட்டுப் பொருட்களை பரிசாக வழங்கினார்

சாண்டாவாக மாறிய சச்சின்

உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் இந்த ஆண்டு விசேசமாக தன்னுடைய கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடினார். ஆஸ்ராய் என்னும் குழந்தைகள் நல மையத்தில் (Ashray Child Care Centre) சாண்டா கிளாசாக வேடமணிந்து சச்சின் சென்றார்.

இது தொடர்பான வீடியோ தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவர்.

சச்சின் சாண்டாவாக மாறி தன்னுடைய குழந்தைகளுடன் ஆடிப்பாடி அவர்களுக்கு விதவிதமான விளையாட்டுப் பொருட்களை பரிசாக வழங்கினார்.

 

 

அங்கு சென்று குழந்தைகளுடன் மகிழ்ந்த நேரத்தை குழந்தைகளின் கள்ளம் கபடமில்லாத முகத்தை பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு விலைமதிப்பே இல்லை என்று தெரிவித்திருந்தார்.

வீடியோவின் கடைசி காட்சியில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Click for more trending news


More News