உடைந்துபோன ஜிப்பை சரிசெய்வது எப்படி? - பிரபல நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ!!

இந்த ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன் என்று பிரபல நடிகர் ரையன் ரெனால்ட்ஸ், ஜிப் சரி செய்யும் வீடியோ குறித்து தெரிவித்துள்ளார்.

உடைந்துபோன ஜிப்பை சரிசெய்வது எப்படி? - பிரபல நடிகர் வெளியிட்ட வைரல் வீடியோ!!

உடைந்த ஜிப்பை சரி செய்வது தொடர்பான வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ்.

உடைந்துபோன ஜிப்பை சரி செய்வது தொடர்பாக சூப்பர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ். இந்த வீடியோ கோடிக்கணக்கில் பார்வையை குவித்து வருகிறது. 

ஜேக்கெட்டுகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஜிப் உடைந்து விட்டால் ஜேக்கெட்டையே நம்மால் மூட முடியாது. ஜிப் உடைந்து போவது என்பது சிறிய விஷயம்தான். ஆனால் பெரிய அளவில் நமக்கு அது எரிச்சலை ஏற்படுத்தும். உடைந்த ஜிப்பை சரிசெய்வதைப் போன்ற எரிச்சல் தரும் ஒரு விஷயம் இருக்காது. 

ஆனால் அதனை மிக எளிதாக சரி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பிரபல ஹாலிவுட் நடிகர் ரையன் ரெனால்ட்ஸ் வெளியிட்டுள்ளார். 

ரையனுக்கும் இந்த ஜிப் பிரச்னை இருந்திருக்கிறது. வீடியோ லிங்க்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த அவர், 'இந்த ஐடியாவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்தேன்' என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

மொத்தம் 14 வினாடிகள் ஓடக்கூடியதாக இந்த வீடியோ உள்ளது. உடைந்த ஜிப் ஸ்லைடரை எளிதாக மாட்டும் முறையை நமக்கு இந்த வீடியோ கற்றுத் தருகிறது. போர்க் கரண்டியின் நடுவில் ஸ்லைடரை மாட்டிக் கொண்டு துணியின் இரு முனைகளையும் ஸ்லைடருடன் பொருத்தும்போது பிரச்னை எளிதாக சரி செய்யப்படுகிறது. 

இந்த வீடியோவை காண...
 

ரையனின் ட்வீட் 1.26 மில்லியன் லைக்குகளை தாண்டியுள்ளது. இந்த ஐடியாவை ஷேர் செய்தமைக்காக ட்விட்டர் பயனர்கள் ரையனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். 

சிலர் இந்த ஜிப் பிரச்னை தற்காலிகமாகத்தான் சரி செய்யப்படுவதாகவும், மீண்டும் கழண்டு வந்து விடுவதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ஜிப் ரிப்பேர் செய்யும் வீடியோ குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை, கமென்ட்டில் தெரிவிக்கலாம்.

Click for more trending news


More News