நாமக்கல்லில் உள்ள போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் வருமான வரிச்சோதனை

அந்நிறுவனம் மாணவர்களிடம் கட்டணத்தின் ஒரு பகுதியை பணமாக வசூலிக்கிறது. கட்டணத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே ரசீதுகள் வழங்கப்பட்டு வந்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நாமக்கல்லில் உள்ள போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத்தில் வருமான வரிச்சோதனை

ஆரம்ப கட்ட சோதனையில் ரூ.150 கோடி கணக்கில் வராத பணம் இருந்ததாக வருமான வரித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Representational)


New Delhi: 

தமிழகமெங்கும் போட்டிக்கான பயிற்சி தேர்வுகளை நடத்தும் நாமக்கல் மாவட்ட வணிக குழுமத்தின் அலுவலகத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 30 கோடி கறுப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்தக் குழுமத்தில் 17 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆரம்ப கட்ட சோதனையில் ரூ.150 கோடி கணக்கில் வராத பணம் இருந்ததாக வருமான வரித்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது..

வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்நிறுவனம் மாணவர்களிடம் கட்டணத்தின் ஒரு பகுதியை பணமாக வசூலிக்கிறது. கட்டணத்தின் ஒரு பகுதிக்கு மட்டுமே ரசீதுகள் வழங்கப்பட்டு வந்துள்ளது. மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் பேரில் வங்கியில் லாக்கர் தொடங்கப்பட்டு அதிலும் பணம் வைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சில கணக்கு வழக்குகள் டைரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்நிறுவனத்தின் ஆடிட்டோரியத்தில் பணத்தை கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்த ஸ்கேனரின் கீழ் அந்நிறுவனம் மற்ற நிறுவனங்களிடம் வைத்திருந்த வியாபார உடன்படிக்கைகளும் கண்டறியப்பட்டு அது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................