This Article is From Mar 20, 2019

லண்டனில் கைதான நிரவ் மோடிக்கு ஜாமின் மறுப்பு!!

ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி விவகாரத்தில் நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸி தேடிப்பட்டு வருகிறார். அவருக்கு கடந்த 2018 ஜனவரி 15-ம்தேதி ஆண்டிகுவா மற்றும் பர்படாவில் குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

Nirav Modi: இந்தியாவின் கோரிக்கையை ஏற்று நிரவ் மோடிக்கு இங்கிலாந்து அரசு கைது வாரன்ட்டை பிறப்பித்திருந்தது.

New Delhi:

 

லண்டனில் கைதாகியுள்ள நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

 5 லட்சம் பவுண்ட் தொகை செலுத்தினால் மட்டுமே ஜாமின் வழங்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு மோசடி செய்த புகாரில் தேடப்படும் நிரவ் மோடி, லண்டனில் கைது செய்யப்பட்டார். அவரை வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் இங்கிலாந்து போலீசார் ஆஜர்படுத்தினர். அங்க அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்றை மத்திய லண்டனில் உள்ள ஹால்போர்ன் மெட்ரோ ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது. நிரவ் மோடியை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கையை ஏற்று இங்கிலாந்து அரசு கடந்த வாரம் நிரவ் மோடிக்கு எதிரான கைது வாரன்ட்டை பிறப்பித்திருந்தது.

நிரவ் கைது செய்யப்பட்டிருந்தாலும் அவரை உடனடியாக இந்தியாவுக்கு கொண்டு வர முடியாது என்பதே நடைமுறை உண்மையாக உள்ளது. ரூ. 9 ஆயிரம் வங்கி மோசடி வழக்கில் விஜய் மல்லையா கடந்த 2017-ல் இங்கிலாந்து சென்றார். அவரை இந்தியா கொண்டு வருவதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது.

சமீபத்தில்தான் மல்லையாவை இந்தியா கொண்டுவரும் கோரிக்கைக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்தது. இருப்பினும் இந்த விவகாரம் இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது.

லண்டனின் வெஸ்ட் என்ட் பகுதியில் உள்ள 33 மாடி அடுக்குமாடி குடியிருப்பில் நிரவ் மோடி வசித்து வருவதாக நம்பப்படுகிறது. அவர் கடந்த சில நாட்களாக பொது இடங்களில் காணப்பட்டு வருகிறார். நேற்று அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது நோ கமென்ட்ஸ் என்று பதில் அளித்திருந்தார்.

ரூ. 13 ஆயிரம் கோடி மோசடி விவகாரத்தில் நிரவ் மோடியின் உறவினர் மெகுல் சோக்ஸி தேடிப்பட்டு வருகிறார். அவருக்கு கடந்த 2018 ஜனவரி 15-ம்தேதி ஆண்டிகுவா மற்றும் பர்படாவில் குடியுரிமை வழங்கப்பட்டது குறிப்பிட்டத்தக்கது.

 

.