This Article is From Apr 07, 2020

கொரோனா தடுப்பு பணிக்கு எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி

எம்எல்ஏக்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் வரை செலவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில அளவில் மருத்துவ உபகரணம், மருந்து வாங்க, தடுப்பு நடவடிக்கைக்கு பணம் பயன்படுத்தப்படும்.

கொரோனா தடுப்பு பணிக்கு எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி

கொரோனா தடுப்பு பணிக்கு எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி

ஹைலைட்ஸ்

  • எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடி
  • கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது.
  • எம்எல்ஏக்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் வரை செலவு செய்யவும் அனுமதி

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 621 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 1,03,71,878 ரூபாய் ஒதுக்கியுள்ளார். அவ்வாறு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்துள்ளது. அரசின் இந்த அணுகுமுறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட அறிவிப்பில், “அரவக்குறிச்சி தி.மு.க எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம் பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவனிக்கவும்!” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்கு அனைத்து தமிழக எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ.1 கோடியை பயன்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். எம்எல்ஏக்கள் விரும்பினால் ரூ.25 லட்சம் வரை செலவு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில அளவில் மருத்துவ உபகரணம், மருந்து வாங்க, தடுப்பு நடவடிக்கைக்கு பணம் பயன்படுத்தப்படும்.

.