This Article is From Aug 18, 2018

கேரளாவில் ஏ.எல்.பி மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு

கேரளாவில் ஏ.எல்.பி மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கான தேர்வுகளை ஒத்திவைத்தது ரயில்வே தேர்வாணையம்

கேரளாவில் ஏ.எல்.பி மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைப்பு
New Delhi:

புது தில்லி: கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஏ.எல்.பி (ALP) மற்றும் டெக்னீஷியன் பணிகளுக்கான கணினித் தேர்வுகளை இரயில்வே பணியாளர் தேர்வாணையம் (ஆர்.ஆர்.பி) ஒத்திவைத்துள்ளது. கேரளா தவிர்த்த மற்ற மாநிலங்களில் திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும். தனது அனைத்து மாநில வலைத்தளங்களிலும் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என ஆர்.ஆர்.பி தெரிவித்து இருந்தது.

தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் இந்த தகவல் தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் மறைவை அடுத்து பல மாநிலங்களில் அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் தேர்வு நடக்குமா என்று ஏற்பட்டிருந்த குழப்பத்தைத் தொடர்ந்து, தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என ஆர்.ஆர்.பி இந்த அறிவிப்பை அனுப்பியிருந்தது.

கேரளாவில் உள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதுபவர்களுக்கு மட்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 17 முதல் 18 வரை நடக்கவிருந்த பல தேர்வுப்பணிகளையும் கேரள பணியாளர் தேர்வாணையம் (KPSC) ஒத்திவைத்துள்ளது. எழுத்துத் தேர்வுகள், துறைசார் தேர்வுகள், நேர்முகத்தேர்வுகள், சான்றிதழ் சரிபார்த்தல் ஆகிய அனைத்து நடைமுறைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மறுபுறம், கிரேட் பி பணியாளர்களுக்கான முதல் கட்டத் தேர்வுகளை முன்பு அறிவித்தபடியே ஆகஸ்ட் 16 அன்று தொடங்கியதற்காக ரிசர்வ் வங்கி எதிர்ப்புகளைச் சந்தித்தது.

கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் கலந்துகொண்ட செய்தியாளர் சந்திப்பில் அனைத்துக் கல்வி நிறுவனங்களும் ஆகஸ்ட் 29 வரை செயல்படாது என விடுமுறை அறிவித்துள்ளார்.

 

.