This Article is From May 12, 2019

“மேகமூட்டத்தால் பாக். ரேடாரிடமிருந்து எஸ்கேப் ஆகலாம்!”- சர்ச்சையாகும் பிரதமரின் கருத்து

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில், இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமில் குண்டு போட்டுத் தாக்கினர்

பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து பாஜக-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது.

New Delhi:

பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் ஒரு டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், பாலகோட் விமானப்படை தாக்குதல் குறித்து சில கருத்துகளை கூறியுள்ளார். அவர் கூறிய கருத்து தற்போது சர்ச்சையாகியுள்ளது. 

நியூஸ் நேஷன் என்கின்ற டிவி சேனலுக்கு பாலகோட் தாக்குலத் பற்றி பிரதமர் மோடி அளித்த பேட்டியில், “அன்று திடீரென்று வானிலை மாறியது. வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. கனமைழை வேறு பெய்தது. மேகமூட்டம் இருப்பதால், திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. இது குறித்து விவாதித்த போது, துறை சார்ந்த வல்லுநர்கள், தாக்குதல் தேதியை மாற்றலாம் என்று சிபாரிசு செய்தனர். 

ஆனால் எனக்கு இரண்டு விஷயங்கள் முக்கியமாக பட்டன. ஒன்று, இந்த திட்டம் குறித்து ரகசியம் காக்கப்பட வேண்டும். இரண்டாவது, எனக்கு அறிவியல் குறித்து அவ்வளவாக தெரியாது. மேகமூட்டமாகவும், மழையும் இருப்பதால் நமக்கு அது சாதகமாக பயன்படலாம் என்றேன். அதன் மூலம் ரேடாரிலிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம் என்று சொன்னேன். முடிவாக, திட்டத்தை செயல்படுத்தலாம் என்றேன்” எனப் பேசியுள்ளார். 

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அதிகாலையில், இந்திய விமானப் படை பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமில் குண்டு போட்டுத் தாக்கினர். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த அதிரடி திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

பிரதமர் மோடியின் இந்த கருத்து குறித்து பாஜக-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து பதிவிடப்பட்டது. அந்த ட்வீட் இப்போது நீக்கப்பட்டு விட்டாலும், பிரதமர் மோடி பேசிய வீடியோ இன்னும் அப்படியே இருக்கிறது. 

மோடியின் இந்த கருத்துக்கு எதிர்கட்சியினர் பலத்த கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி, “தேசிய பாதுகாப்பில் இப்படி விளையாடக் கூடாது. மோடியின் பொறுப்பற்ற பதில் பலத்த சேதங்களை உண்டு செய்யும். இதைப் போன்ற ஒருவர் இந்தியாவின் பிரதமராக இருக்கவே கூடாது. 

அவர் விமானப்படைக்கு போதுமான திறமை இல்லை என்பது போல கருத்தை சொல்லியுள்ளார். இதைப் போன்ற விவகாரங்களை பேசும் அவர் ஒரு ஆன்டி- நேஷனல். எந்த தேசபக்தனும் இதைச் செய்ய மாட்டான்” என்று கொதித்துள்ளார். 

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லவோ, “பாகிஸ்தான் ரேடார் மேகங்களை ஊடுருவிச் செல்லாது. எதிர்கால விமானப்படை தாக்குதலுக்கு இதைப் போன்ற விபரங்கள் மிகவும் முக்கியமானது” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

பலரும் பிரமரின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரேடாருக்கு மேகங்களை ஊடுருவிச் செல்லும் திறன் இருக்கிறது என்றும் பலர் கூறி வருகின்றனர். 

.