2 ஆப்பிரிக்க மாணவர்களை தாக்கியதாக தனியார் கல்லூரியை சேர்ந்த 8 பேர் கைது!

மாணவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை இழந்ததால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்.

2 ஆப்பிரிக்க மாணவர்களை தாக்கியதாக தனியார் கல்லூரியை சேர்ந்த 8 பேர் கைது!

2 ஆப்பிரிக்க மாணவர்களை தாக்கியதாக தனியார் கல்லூரியை சேர்ந்த 8 பேர் கைது! (Representational)

Haridwar:

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் இரண்டு நைஜிரியா மாணவர்களை தாக்கியதாக தனியார் கல்லூரியின் செக்யூரிட்டிகள் உட்பட 8 பேர் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, புதன்கிழமையன்று இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதாக தெரிவித்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சிஓ அபே சிங் செய்தியாளர்களிடம் கூறும்போது, ஹரித்வார் மாவட்டத்தில் ரூர்கி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பகவான்பூர் கல்லூரியின் செக்யூரிட்டிகள் உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

பல்வேறு வீடியோக்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன, நாங்கள் அதை ஆராய்ந்து வருகிறோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது," என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் குணமடைந்து வருவதாக திரு சிங் கூறினார்.

Newsbeep

மாணவர்கள் தாக்கப்பட்டதாக உள்ளூரை சேர்ந்த ஒருவரும் குற்றம் சாட்டியுள்ளார்.

"மாணவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை இழந்ததால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அவர்கள் கல்லூரி கேண்டீனில் சாப்பிடுவதைப் வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் அங்கு பணம் செலுத்தத் தவறியதால் மேலாளர் உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளார். இதனால், அவர்கள் தங்கள் நண்பர்களின் வீட்டிற்குச் செல்ல விரும்பினர், ஆனால் கல்லூரி நிர்வாகம் அனுமதி கொடுக்கவில்லை. 

இதனை மீறியும் அவர்கள் வெளியேறியுள்ளனர், இதனால் அவர்கள் திரும்பி வந்தவுடன் காவலர்களும் அவர்களுடன் சண்டையிட்டுள்ளனர், பின்னர் கல்லூரி நிர்வாகம் அவர்களை அடிக்க குண்டர்களை அழைத்து மோசமாக தாக்கப்பட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மக்கள் அதனை வீடியோக்களாகவும் பதிவு செய்துள்ளனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)