ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ராக்கெட் தாக்குதல்

ஹஷேத் அல்-ஷாபிக்குள் என்ற ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா தனது விரல்களை நீட்டியுள்ளது

ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ராக்கெட் தாக்குதல்

ஈரானிய உயர்மட்ட ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் அவரது வலது கரமாக பார்க்கப்படும் அபு மஹ்தி அல் முஹந்திஸ் கொள்ளப்பட்டதும் நினைவுகூர தகுந்தது

ஹைலைட்ஸ்

  • ஈராக் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் ராக்கெட் தாக்குதல்
  • அக்டோபர் மாதத்தில் இருந்து நடத்தப்படும் 19வது தாக்குதல் இது
  • இப்பொது வரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில்
Baghdad, Iraq:

ஈராக்கின் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை பல ராக்கெட் குண்டுகள் தாக்கியதாக அமெரிக்கவை சேர்ந்த இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சரியாக எப்போது நடந்து, எத்தனை குண்டுகள் வீசப்பட்டன மற்றும் இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏதேனும் உள்ளதா என்பதும் தற்போது வரை தெரியவில்லை என்று அமெரிக்க தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள பகுதி அருகில் ஒரு விமானம் வட்டமிடத்தையும், அதனை அடுத்து இந்த பலத்த வெடிச்சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்க தூதரகம் அல்லது ஈராக் எல்லையை சுற்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ள சுமார் 5200 அமெரிக்க துருப்புகளை குறிவைத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து நடத்தப்படும் 19வது தாக்குதல் இது என்று கூறப்படுகிறது. 

இப்பொது வரை இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஹஷேத் அல்-ஷாபிக்குள் என்ற ஈரான் ஆதரவு குழுக்கள் மீது அமெரிக்கா தனது விரல்களை நீட்டியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் பிற்பகுதியில், K1-னின் வடக்கு ஈராக்கிய தளத்தின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலில் ஒரு அமெரிக்க காண்ட்ராக்டர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானிய உயர்மட்ட ஜெனரல் காசெம் சுலைமானி மற்றும் அவரது வலது கரமாக பார்க்கப்படும் அபு மஹ்தி அல் முஹந்திஸ் கொள்ளப்பட்டதும் நினைவுகூர தகுந்தது.

ஈரான் ஆதரவு பிரிவுகளில் ஒன்றான ஹரகத் அல்-நுஜாபா, அமெரிக்கப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு "கவுண்டன்" ஒன்றை அறிவித்த சில மணி நேரங்களிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த தாக்குதல் நடந்துள்ளது.