This Article is From Oct 29, 2018

‘தங்களுக்குள்ளே போட்டியிட்டுக் கொள்வார்கள்!’- பாஜக- ஐஜத கூட்டணி குறித்து லாலு கிண்டல்

பிகாரில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், பாஜக-வுக்கும் இடையில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நடந்துள்ளது

‘தங்களுக்குள்ளே போட்டியிட்டுக் கொள்வார்கள்!’- பாஜக- ஐஜத கூட்டணி குறித்து லாலு கிண்டல்

ட்விட்டர் மூலம் பாஜக- ஐஜத கூட்டணியை கடுமையாக சாடியுள்ளார் லாலு

Patna:

பிகாரில் ஆளுங்கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளத்திற்கும், பாஜக-வுக்கும் இடையில் லோக்சபா தேர்தலுக்கான தொகுதி பங்கீடு நடந்துள்ளது. இந்நிலையில் இந்தக் கூட்டணி குறித்து பிகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், ‘முதலில் இருவரும் சேர்ந்து போட்டியிடுவார்கள். அப்புறம், தங்களுக்குள்ளேயே போட்டியிட்டுக் கொள்வார்கள்' என்று விமர்சனம் செய்துள்ளார்.

மாட்டுத் தீவன வழக்கில் தண்டனை பெற்ற ராகுல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால், தற்சமயம் அவர் உடல்நிலை தொய்வு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்நிலையில் லாலு தனது அலுவலகம் நிர்வகித்து வரும் ட்விட்டர் பக்கம் மூலம் பாஜக - ஐஜத கூட்டணி குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

அவர் ட்விட்டர் மூலம், ‘இருவருக்குள் கூட்டணி அமைந்தாலும், முதலில் அவர்கள் சேர்ந்து போட்டியிடுவார்கள். பின்னர் தங்களுக்குள்ளேயே போட்டியிட்டுக் கொள்வார்கள். இது தொடர் கதையாகவே இருக்கும்.

முன்னர் பாஜக-வையும் ஐஜத-வையும் பிகார் மக்கள் தனித் தனியாக தோற்கடித்தனர். தற்போது, அவர்கள் இருவரையும் ஒன்றாக தோற்கடிப்பார்கள்' என்று கருத்து கூறியுள்ளார்.

முன்னர், பாஜக-வுக்கும் ஐஜத-வுக்கும் இடையில் 17 ஆண்டுகள் கூட்டணி இருந்தது. ஆனால், கடந்த 2013 ஆம் ஆண்டு, நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று கூறி பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கூட்டணியை முறித்தார். அதன் பிறகு, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து பிகார் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்தார்.

அதில் லாலு - நிதிஷ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், லாலு கட்சியினர் மீது தொடர்ந்து ஊழல் புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில், நிதிஷ் கூட்டணியை முறித்தார். மீண்டும், அவர் பாஜக-வுடன் இணைந்து முதல்வராக பொறுப்பேற்றார்.

அதைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவும், மாட்டுத் தீவன வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

.