அமெரிக்கா, வாஷிங்டன் மாகாணத்தில் நடைப்பெற்று வரும் பொருட்காட்சியில், ஓடும் ராட்சத ராட்டிணம் பழுதடைந்துள்ளது. இதனால், ராட்டிணத்தில் இருந்த மக்கள் தலைகீழாக மாட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த திங்கட்கிழமை அன்று, ஓடும் ராட்சத ராட்டினம் திடீரென்று செயல் இழந்துள்ளது. அப்போது, அதில் பயணித்த 19 பேர் தலைகீழாக மாட்டிக் கொண்டுள்ளனர். 10 நிமிடங்களுக்கும் மேலாக ராட்டிணம் செயல் இழந்து நின்றதால், அதில் பயணித்த மக்கள் அச்சத்தில் கூச்சலிட தொடங்கியுள்ளனர்
பின்னர், தீயனைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ராட்டிணத்தில் சிக்கிய மக்களை காப்பாற்றியுள்ளனர். ராட்சத ராட்டிணத்தில் மக்கள் தலைகீழாக மாட்டிக் கொடண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளன.
Click for more trending newsசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.