ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டத்தை கேள்வியெழுப்பும் ராகுல் காந்தி!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட கர்நாடகாவில் உள்ள பாவகடா பூங்கா அதைவிட மிகப் பெரியது (2,000 மெகாவாட்)" என்று காங்கிரசின் கர்நாடக பிரிவு தலைவரும், மாநிலத்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சருமான டி.கே.சிவகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆசியாவின் மிகப்பெரிய சோலார் திட்டத்தை கேள்வியெழுப்பும் ராகுல் காந்தி!

மத்திய பிரதேசத்தின் ரேவா சூரிய திட்டத்தை "ஆசியாவின் மிகப்பெரியது" என்று அழைத்ததற்காக ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

New Delhi:

சமீபத்தில் ஆசியாவில் மிகப்பெரிய சோலார் திட்டம் என கூறி மத்திய பிரதேசத்தில் ரேவா அல்ட்ரா மெகா சோலார் திட்டத்தினை பயன்பாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி திறந்து துவக்கி வைத்தார். 750 மெகாவாட் மின்சார உற்பத்தியை சூரிய ஒளியிலிருந்த பெற முடியும் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி "அசத்யாகிராஹி" ('சத்தியத்திற்கான போராட்டத்தை நம்பாத ஒருவர்') என ராகுல் காந்தி இந்தியில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

"தற்போது திறக்கப்பட்ட ரேவா சூரிய பூங்கா (750 மெகாவாட்) ஆசியாவின் மிகப்பெரியது என்று மத்திய அரசு எவ்வாறு கூற முடியும் என்பதற்கு மத்திய மின் அமைச்சர் பதிலளிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்ட கர்நாடகாவில் உள்ள பாவகடா பூங்கா அதைவிட மிகப் பெரியது (2,000 மெகாவாட்)" என்று காங்கிரசின் கர்நாடக பிரிவு தலைவரும், மாநிலத்தின் முன்னாள் எரிசக்தி அமைச்சருமான டி.கே.சிவகுமார் கேள்வியெழுப்பியுள்ளார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)