மனிதனை வைத்து எடுக்கப்பட்ட முதல் கலர் எக்ஸ்ரே

CERN னின் கூற்றுப்படி படங்களில் எலும்புகள், தசைகள் இடையேயான வித்தியாசத்தை தெளிவாக கண்டுபிடிக்க முடியும்

மனிதனை வைத்து எடுக்கப்பட்ட முதல் கலர் எக்ஸ்ரே
Paris, France:

பாரிஸ், பிரான்ஸ் : நியூசிலாந்தின் விஞ்ஞானிகள் முதன்முதலில் மனித உறுப்புகளை கலர் எக்ஸ்ரேவாக எடுத்துள்ளனர். மருத்துவத்துறையில் நோயாளிகளுக்கு நோய் கண்டறிய இது பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை கொடுத்த CERN ஆராய்ச்சி அமைப்பு இந்த புதிய முயற்சியை செய்துள்ளது.

பாரம்பரிய கருப்பு மற்றும் வெள்ளை எக்ஸ்ரேவை அடிப்படையாகக் கொண்டு, அதனுடன் துகள்களை ட்ராக்கிங் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டு CERN அம்மைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறை 2012இல் ஹிக்ஸ் பாசன் துகள் மூலம் கண்டறியப்பட்டது.

இந்த புதிய தொழில்நுட்பம் மூலம் மனித உடல் கூறுகளை தெளிவாகவும் துல்லியமாகவும் படம் பிடிக்க முடியும். இதன் மூலம் மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும் என்று CERN அறிக்கை கூறுகிறது.

இந்த தொழில்நுட்பம், மெடிப்பிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் கேமராவில் பயன்படுத்துவது போல் செயல்படுகிறது. மிக தெளிவாகவும் ஹை ரெசல்யூஷன் கொண்ட படங்கள் கிடைக்கிறது.

இந்த கருவியின் மூலம் சிறிய பிக்ஸல்ஸ் மற்றும் துள்ளியமான எனர்ஜி ரெசல்யூஷனை கொண்டிருக்கிறது வேறு எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுத்தாலும் இந்த முறையில் இருக்கும் துள்ளியம் கிடைக்காது என்று கேன்டர்பரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த பில் பட்லர் கூறினார்.

CERN னின் கூற்றுப்படி படங்களில் எலும்புகள், தசைகள் இடையேயான வித்தியாசத்தை தெளிவாக கண்டுபிடிக்க முடியும்.

MARS Bioimaging, என்ற நிறுவனத்துடன் ,ஓடாகோ மற்றும் கேன்டர்பரி பல்கலைக்கழகம் இணைந்து இத்தொழில்நுட்பத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கின்றனர்.

Listen to the latest songs, only on JioSaavn.com