தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அதிரடி உத்தரவு!

இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும்

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி அதிரடி உத்தரவு!

தமிழக அரசின் ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தி திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு அரசின் பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் வயது 58லிருந்து 59 வயதாக உயர்த்தி முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணை அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த ஆணை உடனடியாக அமுலுக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஓய்வு பெறும் வயது வரம்பை உயர்த்தியதற்கான காரணம் என்ன என்பது குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் கொடுக்கப்படவில்லை. ஆணை மட்டுமே பிறப்பிக்கப்பட்டுள்ளது.