அமேதியில் பரபரப்பு: முன்னாள் ராணுவ அதிகாரி கும்பல்களால் அடித்துக்கொலை!

உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் இல்லை என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

முன்னாள் ராணுவ அதிகாரி கும்பல்களால் அடித்துக்கொலை


Amethi: 

ஹைலைட்ஸ்

  1. A retired Army captain beaten to death in Uttar Pradesh's Amethi district
  2. Congress general secretary Priyanka Gandhi hits out at the BJP government
  3. The retired Army personnel, his wife were at home when they were attacked

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் முன்னாள் ராணுவ தளபதி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி அருகே கம்ருலி காவல் நிலையத்துற்கு உட்பட்ட கோடியன் கா புர்வா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அமனுள்ளா (64). இவர் இந்திய ராணுவத்தில் தளபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். அமனுள்ளா தனது மனைவியுடன் கிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். 

இந்நிலையில் சனிக்கிழமை இரவு முன்னாள் ராணுவ அதிகாரி அமனுள்ளாவை சில மர்ம நபர்கள் வீடு புகுந்து கட்டைகளால் சரமாரியாக தாக்கி உள்ளனர். 

இது தொடர்பாக அமனுள்ளாவின் மகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் அமனுள்ளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து போலீசாரிடம் அமனுள்ளாவின் மனைவி கூறும்போது, தனது வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் சிலர் திருட முயற்சித்ததாகவும், இதனை கண்ட எனது கணவர் போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதாக அவர்களை எச்சரித்தவுடன், அவர்கள் நேராக எங்கள் வீட்டிற்குள் புகுந்துவிட்டனர். 

தொடர்ந்து, அவர்கள் கையில் வைத்திருந்த கட்டைகளை கொண்டு எனது கணவரை சரமாரியாக தாக்கினர். இதில், அவரது தலையில் பலமாக அடி விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறும்போது, உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் இல்லை. மாநிலத்தில் குற்றசம்பங்களும் அதிகரித்து வருகிறது என்று வேதனை தெரிவித்துள்ளார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................