மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது

ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
மேகாலயா சுரங்க தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை தொடர்கிறது

சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே ராணுவ குழு அமைக்கப்பட்டுள்ளது.


Shillong: 

மேகாலயாவில் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கை இரவு பகலாக நடைபெற்று வருகிறது. சம்பவம் நடந்து ஒன்றரை மாதங்கள் கடந்துள்ள நிலையில் மீட்பு பணிகள் நடக்கின்றன.

கடந்த டிசம்பர் 13-ம்தேதி கிழக்கு ஜெய்ந்தியா பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் தண்ணீர் புகுந்தது. இதில் சுமார் 15 தொழிலாளர்கள் சிக்கியிருந்தனர். அவர்களை மீட்கும் பணி நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் சடலம் ஒன்று அங்கிருந்து மீட்கப்பட்டது.

மற்றவர்கள் உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைந்து விட்டன. இந்த நிலையில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 200-க்கும் அதிகமானோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தவிர்த்து ஒடிசா தீயணைப்பு படையினரும் மீட்பு பணி செய்து வருகின்றனர்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................