This Article is From Jan 27, 2020

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா!! நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

இந்திய ராணுவத்தின் வலிமை குடியரசு தினமான இன்று உலகுக்கு பறைசாற்றப்பட்டது. ராணுவத்தின் பீஷ்மா டாங்க், விமானப்படையின் ரபேல் போர் விமானம், சினூக், அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் சாகசம் நிகழ்த்தின.

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா!! நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்!

இந்தியா தனது 71-வது குடியரசு தினவிழாவை இன்று கொண்டாடியது

ஹைலைட்ஸ்

  • இந்தியா தனது 71-வது குடியரசு தினவிழாவை இன்று கொண்டாடப்பட்டது
  • 22 மாநில வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன.
  • பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சானரோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
New Delhi:

இந்தியாவின் 71-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இன்றைய நிகழ்வையொட்டி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். 

காலை 9 மணிக்கு தொடங்கி கொண்டாட்ட நிகழ்ச்சிகள் 11.45 வரைக்கும் நீடித்தது. இதில், ஏராளமான அணிவகுப்பு வாகனங்கள் பங்கேற்றன. இவை நாட்டின் ராணுவ வலிமை, கலாசாரம், வேற்றுமையில் ஒற்றுமை, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றைஉலகுக்கு பறைசாற்றும் வகையில் அமைந்தன.

விழாவின் தொடக்கமாக பிரதமர் மோடி தேசிய போர் நினைவுச் சின்னத்திற்கு சென்று வீரர்களுக்கு மரியாதை  செலுத்தினார். தேசியக் கொடி பறக்கவிடப்பட்டு 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி விழா நடைபெற்ற இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆயிரக்கணக்கான போலீஸ் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

குடியரசு தினவிழா குறித்த தகவல்கள்

1. மொத்தம் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 22 வாகனங்கள் அணிவகுப்பில் பங்கேற்றன. மேற்கு வங்கம், கேரளா மாநில வாகனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.

2. ராணுவத்தின் வலிமையை உலகுக்கு தெரியப்படுத்தும் வகையில் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. தரைப்படையின் பீஷ்மா டாங்க், போர் ராணுவமான பிகாடே, விமானப்படையின் ரபேல் போர் விமானம், சினூக் மற்றும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் அணி வகுப்பில் பங்கேற்றன.

3. குறிப்பாக குதிரைப்படை அணிவகுப்பு நடைபெற்றது. உலகிலேயே செயல்பாட்டில் உள்ள குதிரைப்படை என்றால் அது இந்திய ராணுவத்தின குதிரைப்படையாகத்தான் உள்ளது. குமாவோன், சீக் காலாட் படைகளின் குதிரைப்படை 6 குழுக்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டன. ருத்ரா, துருவ் ஹெலிகாப்டர்களின் சாகசங்களும் இடம்பெற்றன.

4. விமானப்படையில் 144 பேர் வீரர்கள் தளபதி ஸ்ரீகாந்த் சர்மா தலைமையில் கலந்து கொண்டனர். விமானப்படையின் அணிவகுப்பு வாகனத்தில் ரபேல், தேஜஸ் போர் விமானங்கள், இலகு ரக ஹெலிகாப்டர்கள், ஆகாஷ், அஸ்த்ரா ஏவுகனைகள் இடம்பெற்றன.

5. ஜாகுவார் போர் விமானம், மேம்படுத்தப்பட்ட மிக் 29 ரக போர் விமானங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

6. செயற்கை கோள் ஆயுதங்களை எதிர்க்கும் வல்லமை கொண்ட சக்தி ஆயுதங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன.. செயற்கை கோள்களால் ஆபத்து ஏற்பட்டாலும் கூட அதனை எதிர்க்கும் வல்லமை இந்தியாவுக்கு உண்டு என்பதை இந்த ஆயுதம் உலகுக்கு காட்டியது.

7. கப்பற்படையில் 144 இளம் போர் வீரர்கள் தளபதி ஜிதின் மல்காத் தலைமையில் கலந்து கொண்டனர். கப்பற்படையின் அணி வகுப்பு வாகனமும் பங்கேற்றது.

8. ரிசர்வ் போலீஸ் படையில் முதன்முறையாக பெண் இருசக்கர வாகனங்களை வீர தீரத்துடன் ஓட்டி வந்தனர். இன்ஸ்பெக்டர் சீமா நாக் இதற்கு தலைமை வகித்தார்.

9. இறுதியாக 3 இலகு ரக ஹெலிகாப்டரில் திரிசூல் குழுவினர் சாகசம் நடத்தினர். முப்படைகளை சேர்ந்த இலகு ரக ஹெலிகாப்டர்கள் இதில் பங்கேற்றன. இதைத் தொடர்ந்து சினூக் ஹெலிகாப்டர்களின் சாகசம் நடைபெற்றது.

10. ஸ்டார்ட் அப் இந்தியா, ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவற்றை விளக்கும் அணிவகுப்பு வாகனங்கள் இன்றைய நிகழ்வில் பங்கேற்றன.

.