குடியரசு தினம் 2019: திகைப்பூட்டும் சாகசங்களை கொண்டு அசத்திய வீரமங்கைகள்!

குடியரசு தினம் 2019: அண்களை மட்டுமே கொண்ட ராணுவ குழு அணிவகுப்பை தலைமை தாங்கி லெப்டினன்ட் பாவானா கஸ்தூரி வரலாற்றுச்சாதணை!

குடியரசு தினம் 2019: திகைப்பூட்டும் சாகசங்களை கொண்டு அசத்திய வீரமங்கைகள்!
New Delhi:

இந்தியாவின் 70வது குடியரசு தினவிழாவையொட்டி பல விதமான அணிவகுப்புக்களும் சாகசங்களும் இந்திய வீரர்களால் டெல்லியில் உள்ள ராஜபாதையில் நிகழ்த்தப்பட்டன. இதில் முக்கிய விஷையமாக பெண் வீரர்கள் இந்த அணிவகுப்புகளில் முக்கிய பங்கு வதித்தது சிறப்பழித்தது. மூப்படைகளிலும் உள்ள பெண் அதிகாரிகள் தங்களது சக ஆண் வீரர்களுக்கு சற்றும் குறையாமல் சாகசங்களில் அசத்தினர்.

இந்திய வரலாற்றில் இதுவரை ஆண்களை மட்டுமே கொண்ட பரிவு நடத்திய அணிவகுப்புகளை பெண் அதிகாரிகள் தலைமை தாங்கியதில்லை, இதை லெப்டினன்ட் பாவானா கஸ்தூரி அண்களை மட்டுமே கொண்ட அணிவகுப்பை தலைமை தாங்கி நாட்டில் உள்ள அனைத்து பெண்களையும் பெருமையடைய செய்தார்.

மேலும் அசாம்மை சேர்ந்த பெண்களை மட்டுமே கொண்ட ரைபிள் குழு முதல்முறையாக குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்றது. 30 வயது தாய்யான மேஜர். குஷ்பூ கான்வார் இந்த பெண்களை மட்டுமே கொண்ட அசாம் ரைபிள் குழுவை தலைமை தாங்கினார். இந்த குழுவே இந்தியாவின் பழமையான துணைப்படையாகும்.

k1tes3mg

‘பெண்களை மட்டுமே கொண்ட அசாம் ரைபிள் குழுவை தலைமை தாங்கியது என்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த அணிவகுப்புக்காக நாங்கள் கடுமையாக பயிற்சி செய்தோம். என் தந்தை ராஜஸ்தானில் பேருந்து நடத்துனராக இருக்கிறார், இந்த நிலையை என்னால் அடைய முடிந்தது என்றால் இதை நாட்டில் உள்ள அனைத்து பெண்களாலும் சாதிக்க முடியும்' என மேஜர். குஷ்பூ கான்வார் கூறினார்.

இருசக்கிரவாகனங்களில் மிகவும் துணிச்சலுடன் செய்யப்பட்ட சாகசங்களிலும் பெண் வீரர்கள் இடம்பெற்றனர். கார்ப்ஸ் ஆப் சிக்னல்ஸ்யை சேர்ந்த கேப்டன் ஷீக்ஷா சுராபி மோட்டார் சைக்கிள் மீது நிகழ்த்தப்பட்ட சாகசத்தில் உச்சத்தில் நின்று நமது குடியரசு தலைவருக்கு வணக்கம் வைத்தது பெருமைக்குறியதாகும்.

கேப்டன் பாவானா சாயல் , ராணுவத்தின் மூன்றாவது தலைமுறை அதிகாரி, போக்குவரத்து செயர்கைகோள் முனையத்தை தலைமையாங்கினார். மேலும் லெப்டினன்ட் அம்பிகா சுதாகரன் 144 கப்பல் படை வீரர்களை கொண்ட குழுவுக்கு தலைமை தாங்கினார்.

'ஆண் மற்றும் பெண் வீரர்கள் என இரு பாலினருமே நாட்டிற்காக சேவை செய்வதில் இணைந்துதான் செயல்படுகிறோம்' என லெப்டினன்ட் அம்பிகா சுதாகரன் கூறினார்.

'இந்தாண்டு அதிகபடியான பெண் வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. இது இந்தியாவின் ராணுவ சக்தியை பிரதிபலிக்கும்' என மேஜர் ராஜ்பால் பூனியா கூறினார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பெண்களாலும் பலதுறைகளில் சாதிக்க முடியும் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது.

Newsbeep