அசோக் சக்ரா விருதினை பெற்றவர் யார்…? பின்னணி என்ன..?

இரண்டு மாதங்களுக்கு முன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் படைவீரருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது.

அசோக் சக்ரா விருதினை பெற்றவர் யார்…? பின்னணி என்ன..?

Republic Day 2019: லான்ஸ் நயிக் நஸீர் அஹ்மத் வானி குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இந்த விருதை வழங்கினார்.

New Delhi:

இரண்டு மாதங்களுக்கு முன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட காஷ்மீர் படைவீரருக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டது. குடியரசு தினவிழாவில் நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருதை  மறைந்த ராணுவ வீரர் லான்ஸ் நயிக் நஸீர் அஹ்மத் வானி குடும்பத்தினரிடம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த இந்த வழங்கினார். 

நவம்பர் 25 அன்று லான்ஸ் நயிக் வானி (38), காஷ்மீர் அருகில் உள்ள படாகுண்ட்-இல் உள்ள ஹிராபூர் கிராமத்தில் 6 தீவிரவாதிகளுக்கு எதிராக  தாக்குதல் நடத்தியது. ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகள் மறைந்திருந்த வீட்டைத் தாக்கினார்கள். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த லான்ஸ் நயிக் மருத்துவமனை அழைத்துச் செல்லும் முன் உயிரிழந்தார். 

லான்ஸ் நயிக் வானி 90களின் முற்பகுதியில் கிளர்ச்சிக் குழுவில் இணைந்திருந்தார். அதன்பின் 162 பட்டாலியன் காலாட் படையில் ஜம்மு  காஷ்மீரில் லைட் இன்ஃபான்ட்ரியில் இணைந்தார். 

Newsbeep