This Article is From Sep 21, 2018

சட்டக் கல்லூரிகளில் தகுதியற்ற ஆசிரியர்கள் குறித்தான வழக்கு: உயர் நீதிமன்றம் கறார்!

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை செப்டம்பர் 25-க்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்

சட்டக் கல்லூரிகளில் தகுதியற்ற ஆசிரியர்கள் குறித்தான வழக்கு: உயர் நீதிமன்றம் கறார்!

சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் இருக்கும் சட்டக் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதியற்ற ஆசிரியர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இது குறித்து அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை செப்டம்பர் 25-க்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் டி.சங்கர், மீண்டும் தனக்கு பணி ஆணை வழங்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, ‘தற்போது சட்டக் கல்லூரிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் தகுதி குறித்தான சான்றிதழ்கள், மற்றும் பிற ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். சட்டக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், தலைமை ஆசிரியர்கள் ஆகியோரை எதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டனர் என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்’ என்று அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு உத்தரவிட்டுள்ளார். வரும் 25 ஆம் தேதிக்குள் இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.