This Article is From Feb 23, 2019

2 ஆண்டுகளில் குஜராத்தில் 204 சிங்கங்கள் உயிரிழப்பு – அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

குஜராத்தின் கிர் காடுகளில் சிங்கங்கள் வசித்து வருகின்றன. 2015-ம் ஆண்டு தகவலின்படி சுமார் 600 சிங்கங்கள் அங்கு இருக்கின்றன.

2 ஆண்டுகளில் குஜராத்தில் 204 சிங்கங்கள் உயிரிழப்பு – அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

குஜராத்தின் 8 மாவட்டங்களில் சிங்கங்கள் வசிக்கின்றன.

ஹைலைட்ஸ்

  • 2017,18-ம் ஆண்டுகளில் மொத்தம் 94 சிங்கக் குட்டிகள் உயிரிழந்திருக்கின்றன
  • விலங்குகளுக்காக 3,159 திறந்தவெளி கிணறுகளை குஜராத் அரசு ஏற்படுத்தியுள்ளது
  • சிங்கங்களின் உயிரிழப்பு தொடர்பாக குஜராத் அரசு சட்டமன்றத்தில் தகவல்

குஜராத்தில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் 204 சிங்கங்கள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தகவலை குஜராத் அரசு சட்டசபையில் தெரிவித்திருக்கிறது.

சுமார் 22 ஆயிரம் கிலோ மீட்டர் சதுர பரப்பளவில் 8 மாவட்டங்களில் சிங்கங்கள் வசித்து வருகின்றன. அவற்றில் கிர் காடுகள்தான் அவற்றின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. இந்தநிலையில் சிங்கங்களின் உயிரிழப்பு தொடர்பாக குஜராத் அரசு சட்டமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. அதன் விவரம்-

2017-ல் 43-ம், 2018-ல் 67-ம் ஆக மொத்தம் 110 ஆசிய சிங்கங்கள் உயிரிழந்துள்ளன. இவற்றில் 89 இயற்கையாக மரணம் அடைந்தவை. 21 சிங்கங்கள் இயற்கைக்கு மாறான வகையில் உயிரிழந்திருக்கின்றன.

குறிப்பிடத்தகும் வகையில் கிர் காடுகளில் ஒட்டுண்ணி தாக்குதல், கோரைப் பற்களில் வைரஸ் தாக்குதல், பேப்ஸியா பாக்டீரியா தாக்குதல் ஆகியவற்றின் காரணமாக 34 சிங்கங்கள் மரணம் அடைந்திருக்கின்றன. இந்த மரணங்கள் அனைத்தும் இயற்கை மரணங்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்துகிறது.

இதேபோன்று 2017,18-ம் ஆண்டுகளில் மொத்தம் 94 சிங்கக் குட்டிகள் உயிரிழந்திருக்கின்றன. இதே ஆண்டில் குஜராத்தில் மட்டும் 250-க்கும்அதிகமான சிறுத்தைகள், சுமார் 75 சிறுத்தைக் குட்டிகள் மரணம் அடைந்துள்ளன. 2 ஆண்டுகளில் அதிகளவு சிங்கங்களும், சிறுத்தைகளும் உயிரிழந்திருப்பது உயிரின ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

கிர் காடுகளில் விலங்குகளை பாதுகாக்கும் வகையில் 3,159 திறந்தவெளி கிணறுகளை குஜராத் அரசு ஏற்படுத்தியுள்ளது. 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

 

மேலும் படிக்க - “கர்ப்பமாக இருப்பது போல நடித்து பூனைகளை நாடு கடத்திய பெண்

.