கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்வு! மத்திய அரசு தகவல்

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னர் நாட்டில் கொரோனா  பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்தியாவில் 761 அரசு மற்றும் 288 தனியார் ஆய்வகங்கள் கொரோனாவை பரிசோதிக்க செயல்பட்டு வருகின்றன. 

கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்வு! மத்திய அரசு தகவல்

ஐ.சி.எம்.ஆர். தகவல்படி, இந்தியாவில் 86 லட்சத்து 8 ஆயிரத்து 654 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

ஹைலைட்ஸ்

  • கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு
  • 60 சதவீதம்பேர் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளதாக மத்திய அரசு தகவல்
  • 3 லட்சத்து 34 ஆயிரத்து 821 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்
New Delhi:

இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வோரின் எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.  நாட்டின்  அனைத்து  மாநிலங்களிலும் ஏற்படும் கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மத்திய அரசு சேகரித்து அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

தற்போது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்களின் எண்ணிக்கை 1.19 லட்சம் அதிகம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மொத்தத்தில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 821 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள், மீண்டவர்களை தவிர்த்து தற்போது இந்தியாவில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 125 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதன் அடிப்படையில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 59.07 சதவீதமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பின்னர் நாட்டில் கொரோனா  பரிசோதனை மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  தற்போது இந்தியாவில் 761 அரசு மற்றும் 288 தனியார் ஆய்வகங்கள் கொரோனாவை பரிசோதிக்க செயல்பட்டு வருகின்றன. 

ஐ.சி.எம்.ஆர். தகவல்படி, இந்தியாவில் 86 லட்சத்து 8 ஆயிரத்து 654 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 2 லட்சத்து 10 ஆயிரத்து 292 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)