This Article is From Aug 10, 2020

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் மாநில முதல்வருக்கு ஆதரவு!

இதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குள்ளான ஆடியோ, தடவியல் சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அதிருப்தி எம்எல்ஏக்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்: அதிருப்தி எம்எல்ஏ ஒருவர் மாநில முதல்வருக்கு ஆதரவு!

பன்வர் லால் சர்மா இன்று ஜெய்ப்பூரில் முதல்வரை சந்தித்தார்

ஹைலைட்ஸ்

  • பேரம் பேசிய ஆடியோவுடன் சம்பந்தப்பட்டிருந்த எம்.எல்.ஏ முதல்வரை சந்தித்தார்
  • எம்.எல்.ஏ முதல்வர் அசோக் கெஹ்லோட்டுடன் நிற்பதாக அறிவித்தார்.
  • பேரம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வைரலானது
Jaipur:

 சமீப காலமாக ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. ஆளும் காங்கிரஸ் அரசாங்கத்தின் துணை முதல் சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர் கொடியை உயர்த்தி கணிசமான எம்எல்ஏக்களை தனக்கென தனியே பிரித்து அதிருப்தி அணியை உருவாக்கியிருக்கிறார்.

இந்நிலையில், அசோக் கெஹ்லோட் அரசாங்கத்திற்கு எதிராக சதி திட்டம் தீட்டியதாக பரப்பப்பட்ட ஆடியோவில், சம்பந்தப்பட்டுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா இன்று மாலை முதலமைச்சரை சந்தித்த பின்னர் தான் அசோக் கெஹ்லோட்டுடன் நிற்பதாக அறிவித்தார்.

சச்சின் பைலட் வசமிருந்த அதிருப்தி எம்எல்ஏக்களிட் பேரம் பேசிய சஞ்சய் ஜெயின் என்கிற தொழிலதிபருடன் பன்வர் லால் சர்மாவும் சம்பந்தப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவித்திருந்தன. சஞ்சய் ஜெயின் அதிருப்தி எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வைரலானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பேரம் பேசும் ஆடியோ பொது வெளியில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக தனது அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான சதித்திட்டம் தீட்டுவதாக காங்கிரஸ் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது. இதன் தொடர்ச்சியாக பன்வர் லால் சர்மாவை காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தது அக்கட்சி தலைமை.

இதன் தொடர்ச்சியாக சர்ச்சைக்குள்ளான ஆடியோ, தடவியல் சோதனைக்காக அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை தொடங்கவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக அதிருப்தி எம்எல்ஏக்களுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் கண்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று, முதல் முறையாக சச்சின் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரைச் கலந்துரையாடலை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக அசோக் கெஹ்லோட்டுடனான சச்சினின் அனைத்து சிக்கல்களையும் முடிவுக்கு கொண்டுவர ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிய வருகின்றது.

மேலும், சச்சின் பைலட்டின் குறைகளை ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

.