வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து உறங்கிய புலி! வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்!!

அசாமில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் கஜிரங்கா உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

 Share
EMAIL
PRINT
COMMENTS
வீட்டிற்குள் புகுந்து கட்டிலில் படுத்து உறங்கிய புலி! வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்!!

கட்டிலில் படுத்து உறங்கும் புலியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. அசாமில் கனமழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது
  2. புலி, காண்டா மிருகம் உள்ளிட்டவை வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ளன
  3. புலியை காட்டுக்குள் அனுப்பும் முயற்சி நடந்து வருகிறது.

அசாம் வெள்ளம் காரணமாக ஊருக்குள் புகுந்த புலி ஒன்று கட்டிலில் படுத்துக் கொண்டது. அதனை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 
வடகிழககு மாநிலமான அசாமில் கஜிரங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஒற்றைக் கொம்பு காண்டா மிருகம், சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் உயிரியல் பூங்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 
 


நூற்றுக்கணக்கான சிறிய விலங்குகள் வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் புலி போன்ற சற்று பெரிய விலங்குகள் வனப்பகுதியில் இருந்து நீண்ட தூரத்திற்கு செல்லத் தொடங்கியுள்ளன. 

இந்த நிலையில் வங்க இனத்தை சேர்ந்த புலி ஒன்று கட்டை விட்டு தேசிய நெடுஞ்சாலையை தாண்டி ஊருக்குள் புகுந்தது. பின்னர் அங்கிருந்த வீட்டிற்குள் சென்று விட்டது.

அதிர்ஷ்ட வசமாக வெள்ளத்தால் வெளியேற்றப்பட்டபோது இந்த வீட்டில் இருந்தவர்களும் வெளியேறி விட்டனர். இந்த நிலையில் வீட்டுக்குள் சென்ற புலி கட்டிலில் படுத்துக் கொண்டது. இதனை வெளியே இருந்த ஓட்டையின் வழியே பார்த்தவர்கள் அதனை புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர். இது பல லைக் மற்றும் ஷேர்சை குவித்து வருகிறது. 

புலியை மீண்டும் காட்டுக்குள் அனுப்பும் பணியை வனத்துறையினர் தொடங்கியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளத்தில் 31 காண்டா மிருகம், புலி உள்பட 360 விலங்குகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................