டாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம்?... அமைச்சரின் அடடே விளக்கம்!!

தி.மு.க ஆட்சியில் இருந்தபோதும் டாஸ்மாக் மூலம் 16 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது. அப்போது ஒன்றரை லட்சம் கோடி பட்ஜெட்டாக இருந்தது.

டாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம்?... அமைச்சரின் அடடே விளக்கம்!!

டாஸ்மாக் இயங்கும் நேரமும் 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. 

டாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம்? என்ன என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். 

2020-2021-க்கான தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய தி.மு.க எம்.எல்.ஏ மனோ தங்கராஜ், வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதனிடையே டாஸ்மாக் மூலம் 30,000 கோடி வருவாய் கிடைப்பதாகத் தெரிவிக்கிறீர்கள். இவ்வாறு அரசுக்கு வருவாய் வருவது நல்லதல்ல. மது விலக்கை அமல்படுத்துவோம் எனச் சொன்னீர்கள். எப்போது அமல்படுத்தப்படும் எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, “மது குடிப்பது அதிகரிப்பதே, டாஸ்மாக் வருவாய் உயர்வுக்குக் காரணம். தமிழகத்தில் மக்கள் குடிக்கிறார்கள்.

அதற்காக என்ன செய்ய முடியும்? தி.மு.க ஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கூறினீர்கள். நாங்கள் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என வாக்குறுதி கொடுத்தோம். 

அதன்படி தமிழகத்தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும். ஏற்கெனவே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, டாஸ்மாக் இயங்கும் நேரமும் 2 மணிநேரம் குறைக்கப்பட்டது. 

தி.மு.க ஆட்சியிலிருந்தபோதும் டாஸ்மாக் மூலம் 16 ஆயிரம் கோடி கிடைத்திருக்கிறது. அப்போது ஒன்றரை லட்சம் கோடி பட்ஜெட்டாக இருந்தது. இப்போது 2 லட்சமாக உயர்ந்துவிட்டது. அதனால் மது விற்பனையும் அதிகரித்துள்ளது” எனப் பதிலளித்தார்.

Listen to the latest songs, only on JioSaavn.com