அரசுப்பள்ளி மதிய உணவில் மிதந்த ‘செத்த எலி’! மாணவர்கள், ஆசிரியர் மயக்கம்!!

சமீப காலமாக மதிய உணவு விதிமீறல்களில் உத்தரப்பிரதேச மாநில அடிக்கடி சிக்கி வருகிறது.சில நாட்களுக்கு முன்பாக ஒரு லிட்டர் பாலில் ஏராளமான தண்ணீரை கலந்து, அதனை 81 மாணவர்களுக்கு வழங்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்தது.

அரசுப்பள்ளி மதிய உணவில் மிதந்த ‘செத்த எலி’! மாணவர்கள், ஆசிரியர் மயக்கம்!!

அரசு அளித்துள்ள தகவலின்டி, மாநிலத்தில் ஒன்றரை லட்சம் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது.

Lucknow:

அரசுப் பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் செத்த எலி ஒன்று மிதந்து காணப்பட்டது. இதை அறியாமல் சாப்பாட்டை உண்ட மாணவர்கள் 9 பேர் மற்றும் ஆசிரியர் ஒருவர் ஆகியோர் மயக்கமடைந்தனர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்பர் நகர் மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கு ஹாபூர் நகரில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

அவர்களுக்கு தேவையான மதிய உணவை என்.ஜி.ஓ. நிறுவனமான ஜன் கல்யாண் சான்ஸ்தா என்ற அமைப்பு செய்து கொடுக்கிறது. இந்த நிலையில், இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் செத்த எலி ஒன்று மிதந்து காணப்பட்டது. இது சாம்பாரில் கிடந்ததா? அல்லது சாதத்தில் விழுந்ததா என்பது தெரியவில்லை.

மதிய உணவில் எலி மிதக்கும் புகைப்படம் இணைய தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்வதற்கு முசாபராபாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சமீப காலமாக மதிய உணவு விதிமீறல்களில் உத்தரப்பிரதேச மாநில அடிக்கடி சிக்கி வருகிறது.சில நாட்களுக்கு முன்பாக ஒரு லிட்டர் பாலில் ஏராளமான தண்ணீரை கலந்து, அதனை 81 மாணவர்களுக்கு வழங்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்தின்போது, அரசுப் பள்ளி உணவை சாப்பிட்ட குழந்தைகள் ரொட்டியையும், அதற்கு சைட் டிஷாக உப்பையும் தொட்டு சாப்பிட்டனர். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேச அரசு அளித்துள்ள தகவலின்டி, மாநிலத்தில் ஒன்றரை லட்சம் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதனால் ஒரு கோடிக்கும் அதிகமான குழந்தைகள் பலன் அடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News