க்யூட்டான வெள்ளை நிற சிங்கக் குட்டி - எங்க பார்க்கலாம் தெரியுமா...?

உலகில் 300 வெள்ளை சிங்கங்கள் மட்டுமே உள்ளன. 11 மட்டுமே காட்டுக்குள் வாழ்கின்றன

க்யூட்டான வெள்ளை நிற சிங்கக் குட்டி - எங்க பார்க்கலாம் தெரியுமா...?

ஹங்கேரியின் ஸேகேக் மிருககாட்சி சாலையில் உள்ள வெள்ளை நிற சிங்கம்.

ஹங்கேரியின் ஸேகேக் மிருககாட்சி சாலையில் அரிதான வெள்ளை நிற சிங்கம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பெண் சிங்கக்குட்டிக்கு சஞ்சா என்று பெயரிடப்பட்டுள்ளது. சமூக வலை தளங்களில் மக்களால் வெள்ளை நிற சிங்கக் குட்டி பிரபலமடைந்து வருகிறது. சஞ்சா மே 15 அன்று நாஜா மற்றும் டிம்பாவுக்கும் இடையே பிறந்தது. 1.5 கிலோ எடையுடன் பிறந்தது. தற்போது இதன் எடை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

சஞ்சாவின் புகைப்படம் இணையதளங்களில் வெகுவாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. உலகமெங்கும் ஆயிரக்கணக்கானவர்கள் ஷேர் செய்துள்ளனர்.

t6f3l16k

ட்விட்டர் படத்தை கீழே காணலாம்.

Hello Sonja! A rare white lion, born in the Szeged Zoo in #Hungary on May 15, made its first public appearance on Fri. White lions are not albinos, but have coloration that results from a genetic rarity. pic.twitter.com/ng1TtRl6qI

சின்குவா நியூஸ் கருத்துப்படி வெள்ளை சிங்கம் அல்பினோக்கள் அல்ல. சிங்கத்திற்கு குறிப்பிட்ட மரபணு பற்றாக்குறையிலிருந்து வெள்ளை நிறம் உருவாகிறது. இன்றைய உலகில் 300 வெள்ளை சிங்கங்கள் மட்டுமே உள்ளன. 11 மட்டுமே காட்டுக்குள் வாழ்கின்றன. இந்த இயற்கையாக நிகழும் மரபணு மாறுபாட்டைக் காக்கும் நோக்கத்திற்காக மீதமுள்ளவற்றை முறையாக உயிரியல் மற்றும் இனப்பெருக்க பண்ணைகளில் வாழ்கின்றன.

Click for more trending news